சிக்கிம், பூட்டான் எல்லையில் ஹெலிபேட் அமைக்கும் சீனா- சாட்டிலைட் படங்கள் வெளியானது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிக்கிம், பூட்டான் எல்லைகளில் சீனா ஹெலிபேட் அமைக்கும் சாட்டிலைட் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டே அத்துமீறுவதை சீனா இயல்பாகவே வைத்திருக்கிறது.

China building heliport at tri junction of India, Bhutan,China

லடாக், இமாச்சல் பிரதேசம், சிக்கிம் என ஒவ்வொரு எல்லைகளிலும் குடைச்சல் கொடுத்து வருகிறது சீனா. மியான்மர் எல்லையில் நவீன ரேடார்கள் மூலம் இந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை சீனா இலக்கு வைத்திருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் பூட்டான் நாடு மற்றும் சிக்கிம் மாநில எல்லைகளில் புதியதாக சீனா ஹெலிபேட் அமைத்திருப்பது தெரியவந்துள்ளது. சில தனிநபர்களின் அமைப்புகள் இது தொடர்பான படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளன.

இந்தியா, சீனா, பூட்டான் நாடுகள் இணையக் கூடிய புள்ளியான டோக்லாம் பீடபூமி அருகே இந்த ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய பகுதிகளை எளிதாக சீனாவால் கண்காணிக்க முடியும். தேவைப்பட்டால் ராணுவத்தினரை விரைவாக இந்த பகுதிகளில் குவிக்க முடியும்.

சீனாவின் இந்த நடவடிக்கையால் இருநாடுகளிடையே எல்லை பதற்றம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+