"நாங்க ரெடி.." சீன அமைச்சர் பரபர.. எல்லையில் சீன படைகளை இந்தியா விரட்டியடித்த பின் திடீர் பல்டி
டெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அருணாசல் எல்லையில் சீனா அத்துமீறிய நிலையில், இரு நாட்டு உறவு குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் மோதல் போக்கே நிலவி வருகிறது. குறிப்பாக கல்வான் பகுதியில் கடந்த 2020இல் இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமானது.
அதன் பிறகு இரு தரப்பும் எல்லையில் ராணுவத்தைக் குவித்து வந்தது. இதனால் எல்லையில் பதற்றமான ஒரு சூழலே நிலவி வந்தது. பல கட்ட பேச்சுவராத்தைக்கு பின்னரே, மெல்ல இரு தரப்பும் படைகள் வாபஸ் பெற தொடங்கின.

சீனா அத்துமீறல்
இதனால் எல்லையில் மெல்ல இயல்பு நிலை திரும்பிய நிலையில், கடந்த டிச. 9ஆம் தேதி அருணாச்சல பிரதேச எல்லையில், சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியது. இருப்பினும், அப்போது சீன ராணுவ வீரர்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இந்த மோதலில்ல இந்திய வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. அவ்வளவு ஏன் யாருக்கும் மோசமான காயம் கூட ஏற்படவில்லை. பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங் இது குறித்து நாடாளுமன்றத்திலும் விளக்கமளித்திருந்தார்.

சீன அமைச்சர்
அருணாச்சல பிரதேச எல்லையில் மோதல் நடந்து சில வாரங்கள் ஆகியுள்ள நிலையில், சீனா இப்போது இரு நாட்டு உறவுகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனா-இந்தியா இடையே நிலையான உறவை ஏற்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகச் சீனா கூறியுள்ளது. இது தொடர்பாகச் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி கூறுகையில், "சீனா-இந்தியா உறவுகளின் நிலையான மற்றும் உறுதியான வளர்ச்சியை நோக்கிய திசையில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்.

பல்டி
சீனாவும் இந்தியாவும் தூதரக ரீதியாகவும் ராணுவம் மூலமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட உறுதி பூண்டுள்ளன" என்று அவர் தெரிவித்தார். கடந்த டிச.20ஆம் தேதி தான், இந்தியாவும் சீனாவும் 17ஆவது சுற்று பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தது. இரு நாட்டுத் தளபதிகள் கலந்து கொண்ட இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் எல்லையில் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தை
இந்த மீட்டிகிற்கு வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "தற்காலிகமாக மேற்கு பகுதியில் இரு தரப்பும் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்த ஒப்புக்கொண்டன. இரு தரப்பினரும் தொடர்ந்து ராணுவ மற்றும் தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எல்லையில் இருக்கும் மற்ற பிரச்சினைகளுக்குப் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை விரைவில் உருவாக்க நடவடிக்கை எடுக்க இரு தரப்பும் ஒப்புக் கொண்டோம்" என்று என்று அதில் கூறப்பட்டது.

இந்தியா-சீனா அருணாச்சல் மோதல்
கடந்த டிசம்பர் 9ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டாரில் இந்திய மற்றும் சீன வீரர்கள் மோதிக் கொண்டனர். அப்போது சுமார் 200க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் இந்தியப் பகுதியில் அத்துமீறியதாகவும் அவர்கள் இந்தியப் படைகள் விரட்டியடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் இரு தரப்பு வீரர்களுக்கும் சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

போர் பயிற்சி
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, உத்தரகாண்டில் எல்லையில் அமைந்துள்ள அவுலி என்ற பகுதியில் இந்தியா-அமெரிக்கா ராணுவங்கள் இணைந்து போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டன. சீன எல்லைக்கு மிக அருகே இரு நாட்டு ராணுவங்களும் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது. இதற்குச் சீனா மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருந்தது. இது நடந்து சில நாட்களிலேயே அருணாசல் எல்லையில் சீனா அத்துமீறியது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications