டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லடாக் எல்லையில் 40 சீன வீரர்களை கொன்றது இந்தியா.. மறைக்கிறது சீனா.. மத்திய அமைச்சர்

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக் எல்லையில் நடந்த மோதலில் சீன ராணுவத்தினர் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பர் என்றும் அவர்கள் எப்போதுமே உயிரிழப்புகளை மறைத்து வருகிறார்கள் என்றும் மத்திய அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    India China Border Fight-ல் சீன ராணுவத்தினர் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பர் - VK Singh

    லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கில் சீனா கடந்த 17-ஆம் தேதி நடத்திய திடீர் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். 76 பேர் காயமடைந்தனர். பதிலடிக்கு இந்திய வீரர்களும் தாக்கினர். இதில் ஏராளமான சீன ராணுவத்தினர் உயிரிழந்திருக்கக் கூடும் என இந்தியா தரப்பில் கூறப்படுகிறது.

    China hides their side casualities, says VK Singh

    இதற்கு சீனாவின் அத்துமீறலே காரணம் என இந்தியா தெரிவித்து வரும் நிலையில் சீனாவோ இந்திய வீரர்கள்தான் அத்துமீறினர் என பொய்யான தகவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

    இந்த நிலையில் லடாக் எல்லையில் நடந்த மோதல் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சரும் முன்னாள் ராணுவ தலைமை ஜெனரலுமான விகே சிங் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் லடாக் எல்லையில் நடந்த மோதலில் இந்தியா 20 வீரர்களை இழந்துள்ளது. ஆனால் சீனாவோ 40க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்தது. சீனா தங்கள் உயிரிழப்புகளை மறைக்கிறது.

    நரேந்திர மோடி அல்ல சரண்டர் மோடி.. லடாக் கட்டுரையை ஷேர் செய்து ராகுல் காந்தி பகீர் டிவிட்.. பின்னணி நரேந்திர மோடி அல்ல சரண்டர் மோடி.. லடாக் கட்டுரையை ஷேர் செய்து ராகுல் காந்தி பகீர் டிவிட்.. பின்னணி

    இப்போது என்றில்லை, அவர்கள் எப்போதுமே அவர்கள் தரப்பு உயிரிழப்புகளை மறைப்பது வாடிக்கைதான். 1962ஆம் ஆண்டு நடந்த போரில் கூட சீனா தங்கள் தரப்பு உயிரிழப்புகளை ஒப்புக் கொள்ளவில்லை. சீனாவிற்கு பதிலடிக் கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு பல வழிகள் உள்ளன. சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும். சீனாவை பொருளாதார ரீதியில் தோற்கடிக்க வேண்டும் என்றார் விகே சிங்.

    English summary
    China hides their side casualities, this is not the first time says VK Singh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X