டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கவனிச்சீங்களா.. அந்த பக்கம் சீனா, இந்த பக்கம் கொரோனா.. தில்லா மீசையை முறுக்கிவிட்டு பேசிய மோடி.. செம

பிரதமர் மோடியின் முறுக்கேறிய புது மீசை அனைவரையும் இன்று ஈர்த்ததுடெல்லி

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பேச்சை எத்தனை பேர் பார்த்தார்களோ.. ஆனால் இன்று அவரது கெத்து மீசையில்தான் இருந்தது. ஆமா.. மீசையை லேசாக முறுக்கி விட்டிருந்தார் பிரதமர் மோடி தனது பேச்சின்போது.

கொரோனா ஒரு பக்கம்.. குசும்புக்கார சீனாவின் ராணுவ சீண்டல் மறுபக்கம் என இந்தியா இரட்டைத் தலைவலியை சந்தித்துக் கொண்டுள்ளது. இது போதாதென்று சுண்டக்காய் நாடு நேபாளம் தன் பங்குக்கு நம்மை சீண்டிப் பார்த்துக் கொண்டுள்ளது. பாகிஸ்தானும் வழக்கம் போல வாலாட்டி வருகிறது.

 china india: pm modis new get up

இப்படி அடுத்தடுத்து வரும் சவால்களை சந்திக்க மொத்த நாடும் ஒரே கோட்டில் நின்று எதிரிகளை விரட்ட வேண்டிய கட்டத்தில் உள்ளோம். இந்த நிலையில்தான் புத்திசாலித்தனமாக ஒரு சவாலையும் சந்தித்து வரும் மோடி அரசு சீன நாட்டு செயலிகளை அதிரடியாக தடை செய்து சீனாவை சற்றே அதிர வைத்தது.

இந்தப் பின்னணியில்தான் இன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தினார். கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து விரிவாக விளக்கிப் பேசினார். மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கினார். அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை விளக்கினார். அவரது பேச்சு வழக்கமானதாக இருந்தாலும் கூடவழக்கத்திற்கு மாறாக ஒரு மாற்றம் பிரதமரிடத்தில் தெரிந்தது.

அதுதான் அவரது மீசை. வழக்கம் போல, தாடி மீசையுடன்தான் இருந்தார் பிரதமர். ஆனால் மீசையை லேசாக முறுக்கி விட்டிருந்தார். அது தெளிவாக தெரிந்தது. வழக்கமாக மீசையை முறுக்கி விட்டதில்லை. ஆனால் இன்று லேசாக முறுக்கி விட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. சீனாவையும் ஒரு கை பார்ப்போம்.. கொரோனாவையும் ஓட ஓட விரட்டுவோம் . எதற்கும் அஞ்ச மாட்டோம் என்று மறைமுகமாக இந்த மீசையை முறுக்கு மூலம் மெசேஜ் விட்டாரா பிரதமர் என்பது தெரியவில்லை.

சீனாவை பற்றி இன்றைய பேச்சில் பெரிதாக பிரதமர் குறிப்பிடவில்ல என்றாலும், நிச்சயம் செம கெத்தாக பிரதமர் மோடியின் திடீர் கெட்டப் காணப்பட்டது என்பதில் சந்தேகமே இல்லை.

English summary
china india: pm modis new get up
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X