அடாவடி சீனா.. அருணாசல பிரதேசத்தில் மேலும் 15 இடங்களுக்கு சீன மொழி பெயர் பலகைகள்.. இந்தியா பதிலடி
அருணாசல பிரதேசத்தில் 15 இடங்களில் சீனா உரிமை கோரி உள்ளது
டெல்லி: அருணாசல பிரதேசத்தில் 15 இடங்களில் சீனா உரிமை கோரி உள்ளது.. அவைகளை தன்னுடைய பகுதியாகவும் அறிவித்துள்ளது.. அங்கு சீன மொழியில் பெயர் மாற்றப்பட்ட பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.. இதற்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்து பதிலடியும் தந்துள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை தகராறு நீடித்து வருகிறது.. எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும்கூட இதற்கு முடிவு எதுவும் எட்டப்படவில்லை..
அதிலும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு, இந்த பேச்சுவார்த்தைகள் அதிகரிக்கப்பட்டும் பலனில்லை.. இதனால் 2 நாடுகளுமே தங்கள் வீரர்களை எல்லையில் குவித்து வருகின்றன.

அமைதியற்ற சூழல்
காஷ்மீர் மட்டுமின்றி அருணாச்சல பிரதேசத்திலும் இரு தரப்புக்கும் இடைய அமைதியற்ற சூழல் உருவாகியுள்ளது... இதனிடையே, சீனாவின் எல்லைகள் மீட்பு மற்றும் விரிவாக்க சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, ஜனவரி முதல் தேதியிலிருந்தே எல்லை பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வருகிறது.. இந்த லிஸ்ட்டில்தான் இந்தியாவின் அருணாசல பிரதேசமும் அடங்கி உள்ளது.. அதனால்தான் இங்கு எல்லையோர கிராமங்களை கட்டவும் சீனா திட்டமிட்டு வருகிறது.

புதிய கிராமம்
அதன்படி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அருணாச்சல பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் சீனா புதிய கிராமம் ஒன்றை கட்டிவிட்டதாக அமெரிக்காவின் பென்டகன் செய்தி வெளியிட்டிருந்தது.. அதாவது 100 குடும்பங்கள் வாழக் கூடிய வகையில் சீனா அங்கு ஒரு கிராமத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்பட்டது.. ஆனால், அப்படி எதுவும் கிராமம் அங்கு இல்லை என்று ராணுவ முகாம் மறுப்பு கூறியிருந்தது.

கிராமங்கள்
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அருணாச்சல பிரதேசத்தில் இன்னொரு சீனா கிராமத்தை கட்டிவிட்டதாக என்டிடிவி நிறுவனமும் செய்தி வெளியிட்டிருந்தது.. அதன் பரபரப்பும் இன்றும் அடங்காமல் உள்ளது.. இப்படி நாளுக்கு நாள் அருணாசல பிரதேசத்தை, சீனா மெல்ல மெல்ல கைப்பற்றி சொந்தம் கொண்டாடி வருகிறது... இந்நிலையில்தான், அம்மாநிலத்தில் உள்ள மேலும் 15 இடங்களுக்கு சீன பெயர்களை அந்த நாடு அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது..

மலைப்பாதை
அதாவது, அருணாசல பிரதேசத்துக்கு உட்பட்ட 8 குடியிருப்பு பகுதிகள், 4 மலைகள், 2 ஆறுகள், ஒரு மலைப்பாதை போன்றவற்றுக்கு சீன, திபெத், ரோமன் எழுத்துகளில் பெயர் சூட்டப்பட்டு உள்ளது... சீன அமைச்சரவையும், மாநில கவுன்சில் வழங்கிய விதிமுறைகளுக்கு இணங்கவே, இந்த பெயர்கள் எல்லாம் சூட்டப்பட்டிருப்பதாக சீன அரசு கூறியுள்ளது.. இப்படித்தான், கடந்த 2017-ம் ஆண்டிலும், அருணாசல பிரதேசத்தை சேர்ந்த 6 பகுதிகளுக்கு சீனா புதிய பெயர் சூட்டியிருந்தது.. இப்போது 15 இடங்களுக்கு பெயர் சூட்டி உள்ளது.
Recommended Video

பதிலடி
சீனாவின் இந்த நடவடிக்கைக்குதான் இந்தியா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.. தக்க பதிலடியும் தந்துள்ளது.. அருணாச்சலப் பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்து வருகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது.. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு கண்டுபிடிக்கப்பட்ட புதிய பெயர்களை ஒதுக்குவது இந்த உண்மையை மாற்றாது என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications