மோடி அப்படி பேசியிருக்கக் கூடாது.. இந்தியாவுக்கு சீனா அச்சுறுத்தல் இல்லை.. சீன தூதர் சன் விடாங்
டெல்லி: லடாக்கில் சீன ஆக்கிரமிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவிற்கு எதிராக பொருளாதார நடவடிக்கைகளை எடுத்துவரும் இந்தியாவின் செயலுக்கு பதிலளித்த சீன தூதர் சன் வீடோங், "கட்டாயமாக நீக்குவது என்பது இழப்புகளுக்கு மட்டுமே வழிவகுக்கும்" என்று எச்சரித்தார். மேலும் இந்தியாவுக்கு சீனா அச்சுறுத்தல் இல்லை என்றும் கூறினார்.
Recommended Video
சீன ஆய்வுகள் நிறுவனத்தின் ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் சீனாவின் முன்னாள் இந்திய தூதர்கள் - விஜய் நம்பியார், நிருபமா ராவ் மற்றும் முன்னாள் வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் உரையாற்றிய இந்தியாவிற்கான சீன தூதர் சன் வீடோங், தனது கருத்துக்களிலும் கேள்விகளுக்கான பதில்களிலும் அந்த நாட்டின் ஆளும் கட்சி ஸ்கிரிப்டையே வாசித்தார். பெரும்பாலான கேள்விக்கு சரியான பதில் அளிக்கவில்லை.
குறிப்பாக ஜூன் 15 ம் தேதி கால்வான் மோதல்களில் சீனாவில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது குறித்து பதிலளிக்க தூதர் சன் வீடோங், மறுத்துவிட்டார், அது "உதவாது" என்று மட்டும் கூறினார். உண்மையில், அவரிடம் எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு மழுப்பலான பதில்கள் மட்டுமே அவரிடம் இருந்தன.

பிரச்சனை இல்லை
கால்வான் பள்ளத்தாக்கு விஷயத்தில் சீனாவின் நிலை குறித்து அவர் பேசுகையில், "பாங்காங் ஏரியின் வடக்குக் கரையில், சீனாவின் பாரம்பரிய வழக்கமான எல்லைக் கோடு உண்மையாக எல்லைக்கோட்டு பகுதிக்கு இணங்க உள்ளது சீனா தனது பிராந்திய உரிமைகோரலை விரிவுபடுத்தியதாக அங்கு எந்த பிரச்சனையும் இல்லை. எல்லைப் படையினர் சம்பந்தப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு கண்டிப்பாக கட்டுப்படுவார்கள். சட்டவிரோதமாக எல்லையை கடப்பதை சீன வீரர்கள் தவிர்ப்பார்கள் என நம்புகிறோம்" என்றார்.

சீனா கோபம்
ஜூலை 3 ம் தேதி லடாக்கில் பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாகப் பயன்படுத்திய "விரிவாக்கம்" என்ற சொல் சீனத் தரப்பைக் கோபப்படுத்தியுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில், "விரிவாக்கம்" (ஆக்கிரமிப்பு) என்ற வார்த்தையை சீனாவுக்குப் பயன்படுத்துவது "தவறு" என்று சன் வீடோங் கூறினார்.

மற்ற நாடுகளின் இழப்பில்
இது தொடர்பாக அவர் கூறுகையில், "சீனா தனது இறையாண்மையை உறுதியாக நிலைநிறுத்துகிறது, இதற்கிடையில் ஒருபோதும் எல்லையில் ஆக்கிரமிப்பு அல்லது விரிவாக்கத்தில் ஈடுபடாது. சீனா தனது தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களை உறுதியாக பாதுகாத்துள்ளது. நாங்கள் ஒருபோதும் ஆக்கிரமிப்புடன் இருந்ததில்லை, மற்ற நாடுகளின் இழப்பில் எங்களை வளர்த்துக் கொண்டது இல்லை.

அமைதியான வளர்ச்சி
வேறுபாடுகள் சர்ச்சைக்குரிய முரண்பாடாக மாறியுள்ளன மற்றும் உறவை மோசமாக பாதிக்கின்றன. ... இப்போதைய அவசர தேவை என்னவென்றால், சமீபத்திய, துரதிர்ஷ்டவசமான பிரச்சனையில் இருந்து எல்லைப் பகுதிகளில் நிலைமையை மீட்டெடுப்பதாகும். உண்மையான கட்டுப்பாட்டு கோட்டை நாம் தெளிவுபடுத்துவதும் உறுதிப்படுத்துவதும் இன்றியமையாதது... சீனா அமைதியான வளர்ச்சிக்கு உறுதியளித்துள்ளது, இது இந்தியாவுக்கு எதிரான யுக்தி சார்ந்த அச்சுறுத்தல்" அல்ல. .. சீனா தனது இறையாண்மையை உறுதியாக நிலைநிறுத்துகிறது, இதற்கிடையில் ஒருபோதும் ஆக்கிரமிப்பு அல்லது விரிவாக்கத்தில் சீனா ஈடுபடாது.

தைவான், ஹாங்காங் விவகாரம்
தைவான், ஹாங்காங், சின்ஜியாங், மற்றும் ஜிசாங் விவகாரங்கள் முற்றிலும் சீனாவின் உள் விவகாரங்கள் ஆகும். சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு உட்பட்டது. மற்ற நாட்டின் உள் விவகாரங்களில் சீனா தலையிடவில்லை. வெளிப்புற குறுக்கீட்டை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். மற்ற நாடுகளின் முக்கிய நலன்களுக்கு எதிராக ஒருபோதும் எதிராக செயல்பட மாட்டோம்" இவ்வாறு சன் வீடோங் கூறினார்.












Click it and Unblock the Notifications