இன்னும் 2 நாள் தானே டைம் இருக்கு! சஸ்பென்ஸ் வைக்கும் சீனா.. உற்று பார்க்கும் இந்தியா.. பின்னணி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த நிகழ்வில் கலந்து கொள்வாரா இல்லையா என்பதில் இன்னும் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது. அவரது வருகை தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும் இல்லாததால் குழப்பம் தொடர்கிறது.

இந்தியாவில் வரும் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

China President Xi Jinping BRICS Summit

பிரிக்ஸ்

இந்த பிரிக்ஸ் மாநாட்டிற்கு இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், பல்வேறு உலக தலைவர்களின் இந்தியா வருகை உறுதி செய்யப்பட்டுவிட்டது. இருப்பினும், சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறாரா இல்லையா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தன்னிடம் எந்தவொரு பதிலும் இல்லை என்றே அவர் பதிலளித்தார்.

சீன அதிபர்

ஜி ஜின்பிங் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டால், 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு அவர் டெல்லிக்கு வருவது இதுவே முதல் முறையாக இருக்கும். அந்த கல்வான் மோதலுக்கு பிறகு இந்தியா சீனா இடையே மோதல் போக்கு இருந்தது. ஆனால், அந்த கருத்து வேறுபாடுகளை ஓரம்கட்டி, இரு நாடுகளும் மீண்டும் இணைந்து செயல்படுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் ஜி ஜின்பிங்கின் இந்திய பயணம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் மேற்கு ஆசியாவில் போர் சூழல் நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தவும் ஒரு சரியான வாய்ப்பாகவும் இந்த சந்திப்பு அமையலாம்.

ஏன் முக்கியம்

இது தொடர்பாக இந்திய தூதர் சஞ்சய் பட்டாச்சார்யா கூறுகையில், "ஜி ஜின்பிங்கின் வருகையை சீனா இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை என்றாலும், இதுபோன்ற பலதரப்பு மாநாடுகள் இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு சரியான வாய்ப்பை ஏற்படுத்தும். இந்தியா மற்றும் சீனா இரண்டும் பழமையான நாகரிகங்களை கொண்ட முக்கிய நாடுகள். இரு நாடுகளும் தற்போது வளர்ந்து வரும் பொருளாதார சக்திகளாக உள்ளன.

இந்தியா - சீனா இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பிராந்திய விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான புரிதலை ஏற்படுத்த வேண்டும். அதற்கு இதுபோன்ற மாநாடுகள் சரியான வாய்ப்பை ஏற்படுத்தி தரும். பொருளாதார ரீதியாக இரு நாடுகளுக்கும் இடையே போட்டி இருக்கும் என்றாலும், இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன" என்றார்.

இந்தியா சீனா உறவு

1962ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்ற நிலையில், நீண்ட காலமாக இந்தியா - சீனா உறவு பதற்றத்துடனேயே இருந்து வந்தது. இந்த சூழலில் 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்களும், 4 சீன வீரர்களும் உயிரிழந்தனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் மோசமடைந்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் இருந்த பதற்றத்தை தணித்தது. கல்வான் மோதலுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா சென்ற முதல் பயணம் இதுவாகும்.

பிரிக்ஸ் உச்சி மாநாடு

18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இந்தியாவுக்கு வந்தால் பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையும் நடக்கும் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+