நிலைமையை மாற்ற பார்க்கிறது.. எல்லையில் சீனா பிளான் இதுதான்.. இந்திய வெளியுறவுத்துறை சொன்னது என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லடாக் மோதல் குறித்து விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்திய ராணுவ வீரர்களின் ரோந்துக்கு சீனா தடையாக இருந்தது என்றும் நிலைகளை மாற்ற முயற்சித்தது என்றும் தெரிவித்துள்ளது.

Recommended Video

    The Belt and Road Initiative : சீனாவின் கனவு திட்டம்... எல்லை பிரச்சனைக்கு காரணமா?

    மே மாத தொடக்கத்தில் இருந்து உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில் (எல்.ஐ.சி) சீனா மிகப்பெரிய அளவில் படைகள் மற்றும் ஆயுதங்களை குவிக்கத் தொடங்கியதை அடுத்து, இந்திய தரப்பு எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

    ஆன்லைன் வாயிலாக ஊடகங்களை சந்தித்து, வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா பேசுகையில், கிழக்கு லடாக் பிராந்தியத்தில் உள்ள உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு (LAC ) பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்கு சீனாதான் முழு பொறுப்பு.

    வன்முறைக்கு வழிவகுத்தது

    வன்முறைக்கு வழிவகுத்தது

    ஜூன் 20 ஆம் தேதி நாங்கள் வெளியிட்ட அறிக்கையில் உண்மைகள் இருந்தது. இதுவரை சீனாவின் நடவடிக்கைகளால் தான் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்தது, அத்துடன் ஜூன் 15 ஆம் தேதி வன்முறைகளை எதிர்கொள்வதற்கும் வழிவகுத்தது.

    நேருக்க நேர் பேச்சுவார்த்தை

    நேருக்க நேர் பேச்சுவார்த்தை

    மே மாத தொடக்கத்தில், கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியாவின் இயல்பான, பாரம்பரிய ரோந்து முறைக்குத் தடையாக சீனத் தரப்பு நடவடிக்கை எடுத்தது. இதன் விளைவான இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளின் விதிகளின்படி ராணுவ அதிகாரிகள் தரப்பில் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    ஏற்றுக்கொள்ள முடியாது

    ஏற்றுக்கொள்ள முடியாது

    இதனிடையே மே மாதத்தின் மத்தியில், சீனாவின் மேற்கு செக்டார் ராணுவம் பிற பகுதிகளில் நிலையை மாற்ற முயன்றது. சீன நடவடிக்கைகள் குறித்து எங்கள் எதிர்ப்பை இராஜதந்திர மற்றும் இராணுவ தொடர்புகள் மூலம் பதிவு செய்திருந்தோம், இதுபோன்ற எந்த மாற்றமும் எங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை தெளிவுபடுத்தினோம்.

    படைகளை குறைத்தல்

    படைகளை குறைத்தல்

    இதையடுத்து மூத்த தளபதிகள் ஜூன் 6 ஆம் தேதி ஒன்று கூடி, உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோடு (lAC) பகுதிகளில் படைகளை விரிவாக்கம் செய்யக்கூடாது என்றும், படைகளை குறைக்க வேண்டும் என்றும் ஒரு செயல்முறைக்கு ஒப்புக் கொண்டனர், இது பரஸ்பர நடவடிக்கைகளை உள்ளடக்கியது. இரு தரப்பினரும் உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை மதிக்கவும் பின்பற்றவும் ஒப்புக் கொண்டனர், மேலும் நிலைமையை மாற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவிஇதையடுத்து மூத்த தளபதிகள் ஜூன் 6 ஆம் தேதி ஒன்று கூடி, உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோடு (lAC) பகுதிகளில் படைகளை விரிவாக்கம் செய்யக்கூடாது என்றும், படைகளை குறைக்க வேண்டும் என்றும் ஒரு செயல்முறைக்கு ஒப்புக் கொண்டனர், இது பரஸ்பர நடவடிக்கைகளை உள்ளடக்கியது. இரு தரப்பினரும் உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை மதிக்கவும் பின்பற்றவும் ஒப்புக் கொண்டனர், மேலும் நிலைமையை மாற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ல்லை.

    உயிரிழப்பு ஏற்பட்டது

    உயிரிழப்பு ஏற்பட்டது

    ஆனால் ஜூன் 20 ம் தேதி எனது அறிக்கையில் நான் குறிப்பிட்டது போல, கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு தொடர்பாக சீன தரப்பு இந்த புரிதல்களிலிருந்து விலகி எல்லை முழுவதும் கட்டமைப்புகளை அமைக்க முயன்றது. இந்த முயற்சி தோல்வியுற்றபோது, ​​சீன துருப்புக்கள் ஜூன் 15ம் தேதி அன்று வன்முறையில் இறங்கின. இதனால் நேரடியாக உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதன்பிறகு, இரு நாட்டு தரப்பிலும் இப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் இராணுவ மற்றும் இராஜதந்திர தொடர்புகள் தொடர்கின்றன." என்று கூறினார்.

    உண்மையாக நடக்க வேண்டும்

    உண்மையாக நடக்க வேண்டும்

    இதனிடையே இந்தியா-சீனா எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயற்பாட்டு பொறிமுறையின் கீழ் (WMCC) இருநாடுகளுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை ஒரு "குறிப்பிடத்தக்க வளர்ச்சி" என்று இந்திய வெளியுறவுத்துறை விவரித்துள்ளது. ஜூன் 17 அன்று வெளியுறவு அமைச்சர்களுக்கும் ஜூன் 6 ம் தேதி மற்றும் 22ம் தேதி ராணுவ தளபதிகளுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வைத்தான் இந்திய வெளியுறவுத்துறை 'குறிப்பிடத்தக்க வளர்ச்சி" என குறிப்பிடுகிறது. வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, "சீன தரப்பு இந்த புரிதலை உண்மையாகப் பின்பற்றுவதுடன், எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் அமைதியை விரைவாக மீட்டெடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று கூறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+