ரபேலை துரிதமாக களமிறக்க முடிவு.. லடாக்கில் வேகம் காட்டும் இந்திய விமானப்படை.. மாஸ்டர் பிளான் ரெடி!
டெல்லி: இந்தியா சீனா இடையே லடாக்கில் உரசல் நிலவி வரும் நிலையில், இந்தியா விமானப்படை துரிதமாக ரபேல் விமானங்களை களமிறக்கும் முடிவை எடுத்து உள்ளது.
இந்தியா சீனா இடையில் லடாக் எல்லையில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக மோதல் நிலவி வருகிறது. லடாக்கில் இருக்கும் கல்வான், டெப்சாங், பாங்காங் திசோ, ஹாட்ஸ்பிரிங் பகுதிகளில் மோதல் நிலவி வருகிறது.
இந்த மோதலில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். அதன்பின் ஜூலை 5ம் தேதி நடந்த அமைதி பேச்சுவார்த்தைக்கு பின், லடாக் எல்லையில் பல்வேறு இடங்களில் இருந்து சீனா இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு பின் வாங்கியது.

ஆனால் இன்னும்
ஆனால் இன்னும் எல்லையில் சில இடங்களில் இருந்து சீனா படைகளை வாபஸ் வாங்கவில்லை. எல்லையில் பாங்காங் திசோ, ஹாட்ஸ்பிரிங் பகுதிகளில் இருந்து இன்னும் சீனா படைகளை வாபஸ் வாங்கவில்லை. அங்கு 1.5 கிலோ மீட்டர் பகுதிக்கு ஆக்கிரமித்து சீனா தனது படைகளை குவித்து உள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

இந்தியா என்ன திட்டம்
இந்தியா சீனா இடையே லடாக்கில் உரசல் நிலவி வரும் நிலையில், இந்தியா விமானப்படை துரிதமாக ரபேல் விமானங்களை களமிறக்கும் முடிவை எடுத்து உள்ளது. இதற்கான உச்சபட்ச கூட்டம் ஒன்று இந்த வாரம் நடக்கஉள்ளது. இந்திய விமானப்படை சார்பாக இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இந்திய விமானப்படையின் தளபதி ஆர்கேஎஸ் பாதாவ்ரியா தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.

என்ன பேச உள்ளனர்
இந்த ஆலோசனையின் முக்கியமான மூன்று விஷயங்களை பேச உள்ளனர். அதன்படி எல்லையில் எப்படி வான்வெளி பாதுகாப்பை அதிகரிப்பது.புதிய போர் விமானங்கள் மூலம் எப்படி ரோந்து பணிகளை மேற்கொள்வது என்று ஆலோசனை செய்யப்படும். அதேபோல் இன்னொரு பக்கம் மிராஜ் 2000, சுகோய் 30 எம்கேஐ ஆகிய விமானங்களை எல்லாம் எந்த இடங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தலாம் என்றும் ஆலோசனை செய்ய இருக்கிறார்கள்.

ரபேல் என்ன
இன்னொரு பக்கம் எல்லையில் ரபேல் விமானத்தை களமிறக்குவது தொடர்பாக ஆலோசனை செய்ய உள்ளனர். மற்ற போர் விமானங்கள் உடன் ரபேல் விமானத்தை களமிறக்க முடிவு செய்துள்ளனர். துரிதமாக இரண்டு வாரங்களில் ரபேல் விமானங்களை களமிறக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. ஜூலை 22ம் தேதியில் இருந்து இந்த மீட்டிங் நடக்க உள்ளது. இந்த மாதம் இறுதியில் ரபேல் விமானங்கள் இந்தியாவிற்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

விமானம் எத்தனை
பிரான்சிடம் இருந்து 36 ரபேல் விமானங்களை இந்தியா வாங்க இருக்கிறது. இதன் மதிப்பு மொத்தமும் 60 ஆயிரம் கோடி இருக்கும் என்கிறார்கள். இதை அவசர அவசரமாக இந்தியா வாங்க உள்ளது. முதற்கட்டமாக இந்தியா இதில் 12 விமானங்கள் வரை வாங்கும். மீதம் இருக்கும் விமானங்களை இந்தியா உற்பத்தி செய்யும். ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் மூலம் மீதி விமானங்கள் தயாரிக்கப்படும்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications