மிக் முதல் சுகோய் வரை.. அவசரமாக 33 விமானங்கள் வேண்டும்.. ரஷ்யாவிடம் கேட்ட இந்தியா.. மாஸ் பிளான்!
டெல்லி: சீனாவுடன் லடாக்கில் இந்தியா மோதி வரும் நிலையில் தற்போது ரஷ்யாவிடம் இருந்து இந்திய விமானப்படை அவசர அவசரமாக போர் விமானங்களை வாங்க இருக்கிறது.
இந்தியா சீனா இடையே லடாக்கில் சண்டை முற்றி வருகிறது. லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. இன்னொரு பக்கம் இந்தியாவும் படைகளை குவித்து வருகிறது.
கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் இரண்டு நாட்டு ராணுவத்திற்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

லடாக் மோதல்
சீனாவுடன் லடாக்கில் இந்தியா மோதி வரும் நிலையில் தற்போது ரஷ்யாவிடம் இருந்து இந்திய விமானப்படை அவசர அவசரமாக போர் விமானங்களை வாங்க இருக்கிறது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மிக் -29 மற்றும் சுகோய் -30 எம்கேஐ விமானங்களை வாங்க இருக்கிறது. மொத்தம் 6000 கோடி ரூபாய் மதிப்பில் இந்த விமானங்களை இந்தியா வாங்க இருக்கிறது என்கிறார்கள்.

எத்தனை விமானங்கள்
மொத்தம் 33 விமானங்களை இந்தியா வாங்க உள்ளது. இந்தியா மொத்தம் 21 மிக் -29 விமானங்களை வாங்குகிறது. அதேபோல் 12 சுகோய் -30 விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த விமானங்கள் எல்லாம் அதி நவீனமாக அப்டேட் செய்யப்பட்ட விமானங்கள் ஆகும். புதிய தொழில்நுட்பத்துடன், அதிக சக்தியோடு இந்த விமானங்களை வடிவமைக்கப்பட்டுள்ளது.

செம பவர்
இந்த விமானங்களை வாங்க இந்தியா பல மாதங்களாக பேசி வந்தது. ஆனால் இப்போது இந்தியா இந்த விமானங்களை அவசரமாக வேண்டும் என்று கேட்டு இருக்கிறது. அவசரமாக நடந்த மீட்டிங்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.பெரிய அளவில் சம்பிரதாயங்கள் இல்லாமல் உடனே விமானங்களையே வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. fast-track முறையில் விமானங்களை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.

மாற்று
ஏற்கனவே பல்வேறு விமான விபத்துகள் மற்றும் கால நிலை காரணமாக செயல்படாமல் இருந்த 12 விமானங்களுக்கு பதில் இந்த விமானங்கள் களமிறங்குகிறது. இந்தியா மொத்தமாக கடந்த 15 வருடங்களில் 280 விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. இதில் மிக் மற்றும் சுகோய் விமானங்கள்தான் அதிகம். ரஷ்யாவிடம்தான் நாம் அதிகமாக விமானங்களை வாங்கி வருகிறோம்.

தயார் நிலை
இன்னொரு பக்கம் இந்தியா தனது விமானங்களை வைத்து தீவிர பயிற்சி எடுத்து வருகிறது. தினமும் அனைத்து விமானப்படை குழுக்களும் நாடு முழுக்க பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இன்னொரு பக்கம் விமானங்களின் பாகங்கள் பல புதுப்பிக்கப்பட்டு வருகிறது. சீனாவுடன் சண்டை இருக்கும் நிலையில் இந்தியா இப்படி பயிற்சி எடுத்து வருகிறது.

என்ன எச்சரிக்கை
இது தொடர்பாக இன்று இந்திய விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதில் அளித்துள்ளார். அதில் இந்திய ராணுவ வீரர்களின் தியாகம் வீணாகாது. நாங்கள் பதிலடி கொடுக்க தயாராகி இருக்கிறோம். இந்தியா எதற்கும் தயாராக இருக்கிறது. விமானங்கள் தயார் நிலையில் உள்ளது. விமானப்படை எதற்கும் தயாராக உள்ளது என்று இந்திய விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதில் அளித்துள்ளார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications