முற்கள் சுற்றப்பட்ட கம்பிகள்.. இந்திய வீரர்களை தாக்க சீனா பயன்படுத்திய ஆயுதம்.. லீக்கான புகைப்படம்!
லடாக்: இந்திய வீரர்களை தாக்க சீன ராணுவம் பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
லடாக்: இந்திய வீரர்களை தாக்க சீன ராணுவம் பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எல்லையில் இரண்டு நாடுகளுக்கு இடையில் மோதல் நிலவி வருகிறது. மே 5ம் தேதி லடாக்கிலும், சிக்கிமில் சீனா அத்துமீறியது. அப்போதில் இருந்து இரண்டு நாடுகளுக்கும் சண்டை இருந்து வருகிறது.
இந்த நிலையில் லடாக்கில் இரண்டு நாட்கள் முன் நடந்த சண்டையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்கே சண்டை
இந்த சண்டை லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் நடந்தது. மொத்தம் 8 மணி நேரம் இந்த சண்டை நடந்தது. இந்த சண்டையின் போது இரண்டு நாடுகளும் துப்பாக்கிகள், குண்டுகள் எதையும் பயன்படுத்தவில்லை. முழுக்க முழுக்க கம்பிகள், குச்சிகள், இரும்பு ராடுகள், கற்களை வைத்து தாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இதில்தான் இந்திய வீரர்கள் 20 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணுவம் புகைப்படம்
இந்த தாக்குதலை நிகழ்த்துவதற்காக சீன ராணுவம் முழுக்க முழுக்க தயாராகி வந்து இருக்கிறது. அதாவது சீன ராணுவம் முன்பே திட்டமிட்டு தயாராகி லடாக் பகுதிக்கு வந்து இருக்கிறது. இதற்காக வித்தியாசமான ஆயுதங்களை சீனா உருவாக்கி உள்ளது. அதாவது அந்த எல்லைக்கு வந்த 300 சீன வீரர்கள் எல்லோரும் வித்தியாசமான ஆயுதங்களோடு அங்கு வந்து இருக்கிறார்கள்.

வைரல்
இந்த நிலையில் இந்திய வீரர்களை தாக்க சீன ராணுவம் பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இணையத்தில் வெளியான புகைப்படத்தில் இந்த ஆயுதங்கள் எப்படி இருக்கும் என்ற விவரம் வெளியாகி உள்ளது. கட்டிடம் கட்டும் இரும்பு கம்பியில் முற்களை வைத்து வெல்டிங் செய்து இருக்கிறார்கள். கூரான முற்கள் போல இந்த ஆயுதங்களை உருவாக்கி உள்ளனர்.

திட்டமிட்டு வந்தனர்
அதேபோல் கஜா ஆயுதம் போலவும் நிறைய ஆயுதங்களை உருவாக்கி கொண்டு வந்துள்ளனர். இதை வைத்துதான் இந்திய வீரர்களை சீனர்கள் தாக்கி உள்ளனர். இதனால்தான் இந்திய தரப்பில் மரணங்கள் ஏற்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும் ஒரு நாடு இந்த ஆயுதங்களை கொண்டு வர வாய்ப்பு இல்லை. இதனால் சீன ராணுவம் திட்டமிட்டு இந்த ஆயுதங்களை கொண்டு வந்து இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications