2 மணி நேர வீடியோ காலில் நடந்த டிவிஸ்ட்.. சீனாவிடம் அஜித் தோவல் சொன்னது என்ன? வெளியுறவுத்துறை அறிக்கை
டெல்லி: இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் நடந்த பிரச்சனையில் ஒரு வழியாக சின்ன திருப்பம் ஏற்பட்டுள்ளது. கல்வான் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் வாங்கிக்கொள்ள சீனாவின் ராணுவம் முடிவு எடுத்துள்ளது. ஏற்கனவே 2 கிமீ தூரத்திற்கு சீனா படைகளை வாபஸ் பெற்றுள்ளது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இடையே நடந்த பேச்சுவார்த்தைதான் இதற்கு காரணம். இவர்கள் வீடியோ கால் மூலம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

என்ன அறிக்கை
இந்த மீட்டிங் மொத்தம் இரண்டு மணி நேரம் நேற்று நடந்ததாக கூறுகிறார்கள். இது தொடர்பாக தற்போது இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது . அதில்,இந்தியா மற்றும் சீனாவின் சிறப்பு பிரதிநிதிகள் நேற்று ஆலோசனை செய்தார்கள். இவர்கள் வீடியோ கால் மூலம் எல்லை பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசினார்கள். லடாக்கில் மேற்கு பகுதியில் நடப்பது குறித்து விவாதம் செய்தனர்.

அமைதி எப்படி
இரண்டு நாட்டின் உச்சபட்ச தலைவர்கள் சொல்படி, எல்லையில் அமைதி மற்றும் ஒற்றுமை நிலவ வேண்டும் என்று இதில் பேசப்பட்டது . எல்லையில் நிலவும் தன்மைதான் இரண்டு நாட்டு உறவை தீர்மானிக்கும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகள் சண்டையாக, மோதலாக மாற கூடாது என்று இந்தியா சார்பாக கூறப்பட்டது. இதனால் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் வாங்கி கொள்ள சீனா ஒப்புக்கொண்டது.

வாபஸ் வாங்க வேண்டும்
எல்லையில் இரண்டு நாடுகளும் அமைதியை கடைபிடிக்க வேண்டும். படிப்படையாக, அமைதியாக படைகளை வாபஸ் வாங்க வேண்டும். தன்னிச்சையாக யாரும் முடிவு எடுக்க கூடாது. எல்லையில் நிலைமையை மாற்ற நினைக்க கூடாது. எல்லையில் இருக்கும் கட்டுப்பாட்டு பகுதிகளை மதிக்க வேண்டும்.இரண்டு நாட்டு எல்லைகளை மீறி யாரும் செல்ல கூடாது.

அசம்பாவிதம் கூடாது
எல்லையில் எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்கும் வகையில் பேச்சுவார்த்தை மூலம் அனைத்தையும் தீர்க்க வேண்டும் என்று இதில் பேசப்பட்டது. இந்தியா சார்பாக இனி வரும் நாட்களில் அஜித் தோவல் சீனாவுடன் பேசுவார். இரண்டு நாட்டு பிரதிநிதிகள் தொடர்ந்து எல்லை பிரச்சனை தொடர்பாக பேசுவார்கள். முறையான வழிகாட்டுதல், ஆலோசனையின் கீழ் இவர்கள் இரண்டு பேரும் செயல்படுவார்கள்.

அஜித் தோவல் முக்கியம்
சரியான நேரத்தில் , உடனடியாக இவர்கள் ஆலோசனைகளை இனி மேற்கொள்வார்கள். இரண்டு நாட்டு பிரநிதிகளும் இனி வரும் நாட்களில் எல்லை பிரச்சனை தொடர்பாக பேசுவார்கள் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, என்று இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இதனால் இந்தியா - சீனா மோதலில் இனி வரும் நாட்களில் அஜித் தோவல் முக்கியத்துவம் பெறுவார் என்று கூறுகிறார்கள்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications