"ஆபத்து".. அடம் பிடிக்கும் சீனா.. இந்தியாவின் பேச்சுவார்த்தை.. ஏன் பலனளிக்கவில்லை.. ராகுல் கேள்வி
சீனாவுடனான பேச்சுவார்த்தை தோல்வி ஏன் என்று ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்
டெல்லி: "சீனாவுடன் தற்போது இந்தியா நடத்தி கொண்டிருக்கும் வீண் பேச்சுவார்த்தைகளால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டு கொண்டிருக்கிறது" என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எச்சரித்துள்ளார்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் சீன ராணுவம் எல்லைபகுதியில் அத்துமீற முயன்றதாகவும் படைகளைக் குவிப்பதாகவும் இந்தியா பகிரங்கமாக குற்றம் சாட்டியது.. ஆனால், இதை சீனா திட்டவட்டமாக மறுத்தது.
இதையடுத்து, கடந்த மே மாதம் இருதரப்புக்கும் இடையே மோதல் மூண்டது.. எல்லையில் கடுமையான பதற்றம் நிலவியது... இதையடுத்து இரு நாடுகளும் அமைதி ஏற்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆலோசிக்க முன்வந்தன.

துருப்பு
இதுவரை 2 நாட்டு ராணுவ அதிகாரிகளும் ஏற்கனவே 10முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியாகிவிட்டது.. சீனாவும் தங்களது துருப்புகளை படிப்படியாக வாபஸ் பெற்று வந்தன. ஆனால், அவைகளில் ஒரு முன்னேற்றமும் இல்லை.. காரணம், பங்கோங்சோ ஏரிப் பகுதியில் இருந்து சீனா படைகளை விலக்கிக்கொண்டதை வரவேற்ற இந்தியா, அதேபோல் பிற பகுதிகளில் இருந்தும் படைகளை திரும்பப்பெற வலியுறுத்தியது.

பேச்சுவார்த்தை
குறிப்பாக ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தேஸ்பங்க் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து சீனா தனது படைகளை முற்றிலுமாக திரும்பப்பெற வேண்டும் என்று கூறப்பட்டது.. இதற்குதான் கடந்த ஏப்ரல் 9ம் தேதியன்று 11வது கட்ட பேச்சுவார்த்தையில் இந்தியாவும் சீனாவும் பங்கேற்றன. அப்போதும் எந்த சுமூக முடிவும் எட்டப்படவில்லை. இப்படியாக பேச்சுவார்த்தைகள் ஒரு வருடத்துக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கின்றன..

ட்வீட்
இதைதான் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.. ஆக்கிரமிப்புகள் வாபஸ் பெறப்படாததாலும், இதுவரை நடத்திய பேச்சுவார்த்தை பலன் தராதது குறித்தும் மத்திய அரசை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்... இது குறித்து ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.

வார்னிங்
அதில், "சீனாவுடன் நடத்தி வரும் தேவையற்ற பேச்சுக்களால் இந்த நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்துதான் ஏற்பட்டுள்ளது... எனவே இதைவிட தகுதியான, சிறந்த முடிவுகள் இந்தியாவுக்கு தேவை. கிழக்கு லடாக்கிலுள்ள ஹாட் ஸ்பிரிங், கோக்ரா மற்றும் தேஸ்பங்க் போன்ற பகுதிகளிலிருந்து தங்களது துருப்புகளை சீனா திரும்பப்பெற்றுக் கொள்ள மறுத்துள்ளது. படைகளைத் திரும்பப் பெறுவது பற்றிய சீனாவுடனான பேச்சுவார்த்தை ஏன் பலன் தரவில்லை என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்" என்று மத்திய அரசை எச்சரித்துள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications