இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுக்கு மோடியைத் தொடர்ந்து சீனா அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து!
டெல்லி: இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அனுர குமார திசநாயக்கவுக்கு சீனா அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் சாகர் தொலைநோக்கில் இலங்கை உயர் முன்னுரிமை இடத்தைக் கொண்டுள்ளது. நமது மக்கள் மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் மேம்பாட்டிற்காக நமது பன்முக ஒத்துழைப்பை மேம்படுத்த உங்களுடன் விரிவாக பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன் என தெரிவித்திருந்தார். அத்துடன் இலங்கைக்கான இந்திய தூதர் நேரில் சென்று அனுர குமார திசநாயக்கவுக்கு வாழ்த்தும் தெரிவித்திருந்தார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி எனும் சிங்களப் பேரினவாத பிளஸ் இடதுசாரி கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றார். இதனையடுத்து இன்று இலங்கையின் 9-வது ஜனாதிபதியாக அனுர குமார திசநாயக்க பதவியேற்றார்.

இதனையடுத்து இலங்கை புதிய ஜனாதிபதி அனுராவை, இலங்கைக்கான இந்தியத் தூதர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அனுராவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். பிரதமர் மோடி தமது வாழ்த்துச் செய்தியில்,இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் சாகர் தொலைநோக்கில் இலங்கை உயர் முன்னுரிமை இடத்தைக் கொண்டுள்ளது. நமது மக்கள் மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் மேம்பாட்டிற்காக நமது பன்முக ஒத்துழைப்பை மேம்படுத்த உங்களுடன் விரிவாக பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன் என கூறியிருந்தார்.
தற்போது சீனா அதிபர் ஜி ஜின்பிங்கும் அனுராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தமது வாழ்த்துச் செய்தியில், சீனா அரசாங்கத்தின் சார்பிலும் மக்களின் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இலங்கையும் சீனாவும் பாரம்பரிய நட்பு அயல்நாடுகள். இருநாடுகளும் இராஜதந்திர உறவை உருவாக்கி 67 ஆண்டுகளாகிவிட்டன. இருதரப்பும் புரிந்துணர்வையும்,ஆதரவையும் வழங்குகின்றன. இருநாடுகளும் நட்புறவுமிக்க இருதரப்புக்கும் நன்மை தரக்கூடிய வகையில் செயல்படுகின்றன.
இலங்கையுடனான உறவுக்கு சீனா மிக முக்கியத்துவம் தருகிறது. பாரம்பரிய நட்புறவை முன்னெடுப்போம். இருதரப்பு அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்துவோம். சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தை சாதிப்போம் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications