“சோனம் வாங்சுக்கின் சத்தியாகிரகம் இந்த தேசத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பியுள்ளது”.. நன்றி சொன்ன CJP

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு தங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கு சிஜேபி கட்சி நன்றி தெரிவித்துள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவியது. இதற்கிடையே சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஜூன் 28 ஆம் தேதி முதல் 26 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதையடுத்து, அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் கட்டாயப்படுத்தி அவரது உண்ணாவிரதப் போராட்டம் முடித்து வைக்கப்பட்டது.

CJP Praises Sonam Wangchuk Says Gandhian Satyagraha Awakened the Nation

இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தார். இதையடுத்து சிஜேபி கட்சியினருடன் மத்திய அரசு நடத்திய 3வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. சிஜேபி நிர்வாகிகளின் கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்ட நிலையில், போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும், நீட் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் மற்றும் கல்வித் துறை சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசிப்பது உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதால், போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் அமைதியான முறையில் வீடு திரும்புமாறு சிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் கேட்டுக் கொண்டனர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்திருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று சோனம் வாங்சுக் தெரிவித்தார். குருகிராம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோனம் வாங்சுக் எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், இரு விரல்களை தூக்கி காட்டியபடி புகைப்படத்தை பகிர்ந்து, உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டார்.

இந்நிலையில், போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்ட நிலையில், அது குறித்து சிஜேபி தங்கள் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "சோனம் வாங்சுக்கின் காந்திய வழியிலான சத்தியாகிரகம் இந்த தேசத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பியுள்ளது. நாட்டின் இளைஞர்களுக்காக அவர் மேற்கொண்ட 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் ஒரு உயரிய தியாகம். சாத்தியமற்ற பல சவால்களுக்கு மத்தியிலும் நம் அனைவரையும் ஒன்றுதிரட்டிய தர்மத்தின் ஆற்றலாக இது வரலாற்றில் நிலைத்து நிற்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+