மத்தியில் "இந்தியா" கூட்டணி ஆட்சி அமைத்தால் மு.க.ஸ்டாலின் பிரதமராவார்- அமித்ஷா பரபர பேச்சு!
டெல்லி: மத்தியில் "இந்தியா" கூட்டணி ஆட்சி அமைத்தால் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிரதமராக பதவி வகிப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டின் 18-வது லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் 2 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. ஜூன் 1-ந் தேதி வரை எஞ்சிய 5 கட்ட தேர்தல்கள் நடைபெறும். ஜூன் 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஹாட்ரிக் வெற்றியை அறுவடை செய்யும் முனைப்பில் இருக்கிறது. பாஜக கூட்டணியின் வெற்றியைத் தடுக்க "இந்தியா" கூட்டணி போராடிக் கொண்டிருக்கிறது. பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடியே முன்னிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் "இந்தியா" கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என அறிவிக்கப்படாததை சுட்டிக்காட்டி பாஜக தலைவர்கள் விமர்சித்தனர். இதற்கு பதிலடி தந்த "இந்தியா" கூட்டணி தலைவர்கள், யார் பிரதமர் என்பதை நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். ஒரு ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்கிற பார்முலாவைக் கூட நாங்கள் செயல்படுத்துவோம் என்றனர்.
"இந்தியா" கூட்டணியின் ஓராண்டுக்கு ஒரு முதல்வர் என்ற பார்முலாவை விமர்சித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: 30 ஆண்டுகளாக நாட்டின் நிலையான ஆட்சிகள் அமையவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் வலிமையான தலைவரான மோடி தலைமையில் நிலையான ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசியலில் மட்டுமல்ல அரசின் கொள்கைகள், வளர்ச்சித் திட்டங்களிலும் நிலைத்த தன்மை நிலவுகிறது.
தற்போது "இந்தியா" கூட்டணியின் தலைவர் ஒரு ஆண்டுக்கு ஒரு பிரதமர் என பேசி வருகின்றனர். அதாவது ஒரு ஆண்டுக்கு சரத்பவார் பிரதமராக இருப்பாராம்; இன்னொரு ஆண்டுக்கு மமதா பானர்ஜி பிரதமராக பதவி வகிப்பாராம்; அடுத்த ஒரு ஆண்டுக்கு மு.க.ஸ்டாலின் பிரதமராவாராம்.. அப்புறமாக ராகுல் காந்தியை பிரதமராக்குவார்களாம்.. ஒரு நாடு எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு இதுதான் உதாரணம் என்றார் அமித்ஷா.
முன்னதாக பிரதமர் மோடி பேசுகையில், "இந்தியா" கூட்டணியின் தலைவர்கள் பிரதமர் பதவியை ஏலம் விடுவதில் பிசியாக இருப்பதாகவும் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications