பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்! மு.க.ஸ்டாலின் உட்பட 6 மாநில முதல்வர்கள் புறக்கணிப்பு
டெல்லி: இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட 6 மாநில முதலமைச்சர்கள் இதில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்தனர்.
மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக, கடந்த 2015ம் ஆண்டில் மத்திய பாஜக அரசால் 'நிதி ஆயோக்’ அமைக்கப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கான கொள்கைகளை வகுப்பதே இதன் முதன்மை நோக்கமாகும். நிதி ஆயோக்கின் உயர்நிலை அமைப்பான நிர்வாகக் குழுவின் 9வது கூட்டம், அதன் தலைவரான பிரதமர் மோடி தலைமையில் டெல்லியின் இன்று நடைபெற்றது.

இக்குழு, அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்களை உள்ளடக்கியதாகும். வழக்கமாக நிதி ஆயோக் கூட்டத்திற்கு முதலமைச்சர்களுக்கு பதில் மாநில அமைச்சர்கள் பங்கேற்று வந்தனர். ஆனால் இந்த கூட்டத்தில் முதலமைச்சர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், “2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் இலக்கை எட்டுவதில் மாநிலங்களின் பங்கு குறித்து நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. மேலும், 'வளர்ந்த பாரதம்-2024’ தொலைநோக்குப் பார்வைக்கான அணுகுமுறை ஆவணம் மீது ஆலோசனை நடைபெறவுள்ளது.
மத்திய-மாநில அரசுகள் இடையிலான நிா்வாக ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு, அரசு விநியோக வழிமுறைகளை வலுப்படுத்தி, கிராமப்புற மற்றும் நகா்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதே கூட்டத்தின் நோக்கமாகும். கடந்த டிசம்பா் மாதம் நடைபெற்ற மாநில தலைமைச் செயலா்களின் தேசிய மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் குறித்தும் விவாதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 6 மாநில முதல்வர்கள் அறிவித்திருந்தனர். நடப்பாண்டுக்கான பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களுக்கு மட்டும் அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. மற்ற மாநிலங்களுக்கு குறைவான அளவே நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதனை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார்.
இதே காரணத்திற்காக காங்கிரஸ் ஆளும் கா்நாடகம், ஹிமாச்சல பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களான சித்தராமையா, சுக்விந்தா் சிங் சுக்கு, ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வா் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் உள்ளிட்டோரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். அதேபோல புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வர் ரங்கசாமி மற்றும் டெல்லி ஆம் ஆத்மி அரசும் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளது.
அதேபோல மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அருணாச்சல முதல்வர் பெமா காண்டு, அருணாச்சல பிரதேச துணை முதல்வர் சௌனா மெய்ன், திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ராஜஸ்தான் முதல்வர் பிஜஜன்லால் சர்மா, மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications