Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டெல்லி அரசுக்கு நெருக்கடி தரும் பாஜக அரசு.. கெஜ்ரிவாலுக்கு துணை நிற்போம்.." முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய கருத்துகளை தெரிவித்தார்.

டெல்லி மற்ற மாநிலங்களைப் போல இல்லாமல் யூனியன் பிரதேசமாகவே இருக்கிறது. இதனால் அங்கே ஆளும் கட்சியாக ஆம் ஆத்மி இருந்தாலும், சில முக்கிய அதிகாரம் மத்திய அரசுக்கே இருந்து வருகிறது. இதைத் துணை நிலை ஆளுநர் கண்காணிப்பார்.

இதற்கிடையே டெல்லி குடிமைப் பணி ஊழியர்களை நியமனம் செய்யும் விவகாரத்தில் கெஜ்ரிவால் அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் மோதல் ஏற்பட்டது. துணை நிலை ஆளுநர் நியமனம் குறித்த முடிவுகளை எடுத்தார்.

 CM Stalin says DMK will stand for state govt rights after meeting with Arvind Kejriwal

என்ன பிரச்சினை: இது குறித்து ஆம் ஆத்மி தொடர்ந்து வழக்கில் சமீபத்தில் முக்கிய தீர்ப்பு வந்தது. அதாவது அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் நியமிக்கவும் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது; துணைநிலை ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேலும், அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழங்கவில்லை என்றால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகிவிடும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

ஆம் ஆத்மிக்கு சாதமாக இந்த தீர்ப்பு வந்த நிலையில், இதில் மத்திய அரசு அவசர சட்டத்தைக் கொண்டு வந்தது. அதாவது அதிகாரிகளின் நியமனங்களைக் கண்காணிக்க இரண்டு அதிகாரிகள் மற்றும் டெல்லி முதல்வரைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்று அறிவித்தது. இது சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவையே ரத்து செய்யும் வகையில் இருக்கிறது என்று பலரும் விமர்சித்தனர். இந்த விவகாரம் குறித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பல்வேறு மாநில முதல்வர்களைச் சந்தித்து வருகிறார்.

சந்திப்பு: அதன்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுடன் இன்று சென்னை வந்திருந்தார். அவர் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்திருந்தார். சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அதன் பின்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "நான் டெல்லி செல்லும் போது கெஜ்ரிவாலை அடிக்கடி சந்திப்பேன். டெல்லியில் உள்ள மாடல் கிளாஸ்ரூம் திட்டத்தைப் போல தமிழ்நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நானும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் நேரடியாக அங்குச் சென்று ஆய்வு நடத்தினோம்.

முதல்வர் ஸ்டாலின்: அதேபோல தமிழ்நாட்டில் பெண்களின் நலனிற்காகப் பல திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. அதன்படி கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு உதவும் வகையில் புதுமைப் பெண் திட்டத்தைக் கொண்டு வந்தோம். இத்திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும். எனது கோரிக்கையை ஏற்று இத்திட்டத்திற்குத் தொடக்க விழாவுக்கு கெஜ்ரிவால் வந்திருந்தார். அப்போது அவர் கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தையும் பார்த்தார். இப்படி டெல்லி முதல்வர் எனக்கு நல்ல நண்பராகவே இருந்து வருகிறார்.

டெல்லி யூனியன் பிரதேச முதல்வருக்கும் அவரது ஆம் ஆத்மி கட்சிக்கும் நெருக்கடி ஏற்படுத்த மோடி தலைமையிலான பாஜக அரசு முயல்கிறது. டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சுதந்திரமாகச் செயல்பட விடாமல் பல்வேறு நெருக்கடிகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. டெல்லி துணைநிலை ஆளுநர் மூலமும் தொல்லைகளை வழங்குகிறார்கள்.

 CM Stalin says DMK will stand for state govt rights after meeting with Arvind Kejriwal

திமுக எதிர்க்கும்: பணியாளர்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் டெல்லி அரசுக்குச் சாதகமான ஒரு தீர்ப்பை வழங்கியது. ஆனால், அதை நிறைவேறக் கூடாது என்பதற்காக பாஜக, அதை எதிர்த்து மத்திய அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். இந்த அவசரச் சட்டத்தை நிச்சயம் திமுக எதிர்க்கும். அதில் எந்தவொரு மாற்றக்கருத்தும் இல்லை. இது தொடர்பாக நாங்கள் கலந்து ஆலோசனை நடத்தினோம். அனைத்து மாநில முதல்வர்களும் ஆதரவாக இருக்க வேண்டும்.

இந்தச் சந்திப்பு கடந்த வாரமே நடந்திருக்க வேண்டும். ஆனால், நான் ஜப்பான், சிங்கப்பூர் சென்றதால் சந்திக்க முடியாமல் போனது. இன்று காலை சென்னை வந்த நிலையில், மாலையே அவரை சந்தித்துள்ளேன். நாட்டில் ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்பதற்காகவே இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. தேசிய அரசியல் குறித்தும் பேசியுள்ளோம். ஆனால், சூழல் வரும் போது அது குறித்துக் கூறுவோம்.

வரும் 12ஆம் தேதி நிதிஷ் குமார் கூட்டத்தைக் கூட்ட உள்ளார். இருப்பினும், ராகுல் வெளிநாட்டில் உள்ளதால் காங்கிரஸ் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல நானும் மேட்டூர் அணை திறப்பிற்குச் செல்ல இருப்பதால் என்னாலும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தேதியை மாற்றி வைக்க அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

இது நாடாளுமன்றத் தேர்தலுக்கானது மட்டுமில்லை. ஜனநாயகத்தைக் காக்க இதுபோன்ற சந்திப்புகள் தொடர வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+