Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.41,921 கோடி நிதி மோசடி.. ரிலையன்ஸ் குழுமம் மீது கோப்ரா போஸ்ட் குற்றச்சாட்டு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் உள்ளிட்ட பட்டியலிடப்பட்ட குழும நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட வங்கி கடன்கள், குழும நிறுவனங்களைச் சாராத வேறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதாக கோப்ரா போஸ்ட் என்கிற செய்தி இணையதளம் குற்றம்சாட்டியிருக்கிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை நிறுவனம் மறுத்திருக்கிறது.

இரண்டு குற்றச்சாட்டுகளை கோப்ரா போஸ்ட் முன்வைத்திருக்கிறது. ஒன்று நிதியை வேறு நிறுவனங்களுக்கு திசை திருப்பியது. இன்னொன்று, சட்ட விதி மீறல்கள்.

Anil Ambani Reliance

முதல் விஷயத்தை பொறுத்த அளவில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் உள்ளிட்ட பட்டியலிடப்பட்ட குழும நிறுவனங்களிடமிருந்து திரட்டப்பட்ட வங்கி கடன்கள், ஐபிஓ வருமானம், மற்றும் பத்திரங்கள் மூலம் கிடைத்த சுமார் ₹28,874 கோடி பணம், குழும நிறுவனங்களைச் சாராத, ஆனால் ஊழியர்கள்/ஆதரவாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களுக்கு திசை திருப்பப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியிருக்கிறது.

சிங்கப்பூர், மொரிஷியஸ், சைப்ரஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் ஷெல் நிறுவனங்களின் வலைப்பின்னல் வழியாக, கூடுதலாக $1.535 பில்லியன் (சுமார் ₹13,047 கோடி) "மோசடியான முறையில்" இந்தியாவுக்குள் செலுத்தப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியிருக்கிறது. இதில், சிங்கப்பூரை தளமாகக் கொண்ட EMITS என்ற நிறுவனம், NexGen Capital என்ற அடையாளம் தெரியாத நிதியுதவியாளரிடமிருந்து $750 மில்லியன் பெற்று, அதை ரிலையன்ஸ் குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான ரிலையன்ஸ் இன்னோவென்ச்சர்ஸுக்கு மாற்றியதாக கோப்ராபோஸ்ட் கூறுகிறது. இந்தச் செயல் பணமோசடியாக இருக்கலாம் என்றும் அது கூறியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பணம் திசை திருப்பலைச் சேர்த்து, மொத்த மோசடித் தொகை ₹41,921 கோடியைத் தாண்டியுள்ளதாக கோப்ராபோஸ்ட் கூறியுள்ளது.

அதேபோல இந்த மோசடிகள் நிறுவனங்கள் சட்டம், ஃபெமா, பிஎம்எல்ஏ, செபி சட்டம், மற்றும் வருமான வரிச் சட்டம் போன்ற சட்டங்களை மீறியதாக கோப்ராபோஸ்ட் குற்றம்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம், செபி, என்.சி.எல்.டி, ரிசர்வ் வங்கி மற்றும் வெளிநாட்டு அதிகார வரம்புகளில் உள்ள அதிகாரபூர்வ ஆவணங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் அமைந்தவை என்றும் கூறியுள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்திருக்கிறது. தங்களது நிறுவனத்திற்கு எதிரான தீய பிரச்சாரம் என்றும் நிறுவனம் மறுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் பழைய, பொதுவெளியில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை என்றும், அவை ஏற்கனவே சிபிஐ, அமலாக்கத்துறை, செபி போன்ற ஏஜென்சிகளால் விசாரிக்கப்பட்டவை என்றும் ரிலையன்ஸ் கூறியுள்ளது. மட்டுமல்லாது கோப்ராபோஸ்ட் அறிக்கையை, தங்கள் பங்கு விலைகளை வேண்டுமென்றே குறைத்து, தங்கள் சொத்துக்களைக் கைப்பற்ற முயற்சிக்கும் போட்டியாளர்களால் தூண்டப்பட்ட ஒரு சதி என்று குற்றம் சாட்டியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+