"நாட்டையே இழுத்து மூடிவிடுங்கள்.." கொந்தளிக்கும் கரப்பான் பூச்சி கட்சி.. மத்திய அரசு மீது பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டத்தை கரப்பான் பூச்சி கட்சி அறிவித்திருந்தது. இருப்பினும், கரப்பான் பூச்சி கட்சி தலைவர்கள் விமானத்திலேயே வைத்து கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே நாட்டில் இப்போது போராட்டம் நடத்தும் உரிமை கூட மறுக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையரை காப்பாற்ற மிக பெரிய முயற்சி நடப்பதாகவும் கரப்பான் பூச்சி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சி இன்று போராட்டத்தை அறிவித்திருந்தது. இருப்பினும், இதற்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஆகியவற்றைக் காரணம் காட்டி டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

election commission Cockroach Janata Party protest

கரப்பான் பூச்சி கட்சி

இது தொடர்பாக கரப்பான் பூச்சி கட்சி கடும் ஆட்சேபனை தெரிவித்து கேள்வி எழுப்பியுள்ளது. மும்பை, பெங்களூர் போன்ற நகரங்களில் போராட்டம் நடத்த அனுமதிக்கும்போது, தலைநகர் டெல்லியில் மட்டும் ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்பதே கரப்பான் பூச்சி கட்சியின் கேள்வியாக இருக்கிறது. நேற்றைய தினம் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் அபிஜீத் தீப்கே இந்த கேள்விகளை எழுப்பினார்.

கேள்வி

அவர் மேலும், "மும்பையிலும் பெங்களூரில் போராட்டம் நடத்த முடியும் என்றால், டெல்லியில் மட்டும் ஏன் நடத்த முடியாது? டெல்லி வேறு அரசியலமைப்பின் கீழ் செயல்படுகிறதா?" என்று கேள்வி எழுப்பினார்.

போராட்டத்தை முன்னிட்டு புதுடெல்லி, மத்திய டெல்லி மற்றும் நகரின் எல்லை பகுதிகளில் 20,000க்கும் மேற்பட்ட போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர். பல அடுக்கு தடுப்புகள், கண்காணிப்பு கேமராக்கள், 12 தடுப்புக் காவல் மையங்கள் ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண அதிகாரி

ஜம்மு காஷ்மீர் மற்றும் நக்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் இருந்தும் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக தீப்கே குற்றம்சாட்டினார். தலைமை தேர்தல் ஆணையர் ஒரு அரசு அதிகாரி மட்டுமே என்றும் அவர் பிரதமரோ குடியரசுத் தலைவரோ அல்ல என்றும் அவர் கூறினார். அரசியலமைப்பின் 19வது பிரிவை சுட்டிக்காட்டிய தீப்கே, ஜந்தர் மந்தர் போராட்டங்களுக்காக என்றே ஒதுக்கப்பட்ட இடம் என்பதை சுட்டிக்காட்டினார்.

கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகி அசுதோஷ் ரங்கா பேசுகையில், "போராட்ட இடத்தை அடைவது குறித்த பிரச்சனையால் தேர்தல் ஆணையம் தொடர்பான தங்களது கோரிக்கைகள் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டன. ஒதுக்கப்பட்ட போராட்ட இடத்திலேயே போராட்டம் நடத்துவதற்காகப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.

அனுமதி தேவையில்லை

மற்றொரு தலைவரான சவுரவ் தாஸ், "அக்டோபர் 7ம் தேதி போராட்டம் குறித்து டெல்லி போலீசாரிடம் ஏற்கனவே முறைப்படி தகவல் தெரிவித்துவிட்டோம். அரசியலமைப்பு அமைதியாக போராட்டம் நடத்த உரிமை வழங்கியுள்ளது. எனவே, அனுமதி கோரி நாங்கள் விண்ணப்பிக்க தேவையில்லை. தகவல் தெரிவித்து கடிதம் அனுப்பினோம். அதை பெற்று கொண்டாலும் போராட்டம் நடத்துவதை முடக்க பார்க்கிறார்கள். மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை எடுத்து கொள்ளுங்கள்.. பிரிட்டிஷ் ஆட்சியிடம் காந்தி அனுமதி கேட்டிருப்பாரா?" என்றும் கேள்வி எழுப்பினார்.

நாட்டையே மூடிவிடுங்கள்

பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, டெல்லியின் இரண்டு முக்கிய ரயில் நிலையங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், பல மெட்ரோ நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இணைய சேவைகள் மற்றும் வாடகைக் கார் சேவைகள் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு கட்டுப்பாடுகளை விதிக்க தேர்தலை முறையை மூடிவிட்டு.. நாட்டையே மூடிவிட்டு போகலாம் எனவும் சாடினார்.

ஜந்தர் மந்தர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை சுற்றியுள்ள சுமார் 1.5 கி.மீ. பாதுகாப்பு மண்டலத்தில் மட்டும் 6,500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர். போராட்டத்தில் பங்கேற்க வருவோர் தடுப்பு காவல் மையங்களுக்கு அழைத்து செல்லப்படலாம் என்றும், போலீசார் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+