தரையிறங்கிய அடுத்த நொடி.. விமானத்தில் ஏறிய போலீஸ்.. கரப்பான் பூச்சி தலைவர்கள் திடீர் கைது! வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடைபெறவிருந்த போராட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைவர்கள் விமானத்திலேயே கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிரத் திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களில் தலைமை தேர்தல் ஆணையர் பிற தேர்தல் ஆணையர்களின் கருத்துகளை கேட்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் ஒரு பக்கம் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

Cockroach Janata Party Leaders Arrested Cockroach Janata Party

அதேபோல கரப்பான் பூச்சி கட்சியும் இது தொடர்பாக போராட்டங்களை நடத்தி வருகிறது. ஏற்கனவே பெங்களூர், மும்பையில் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், இன்று டெல்லியிலும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.. இதையொட்டி டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கு டெல்லி போலீஸ் அனுமதி அளிக்காத நிலையில், போராட்டத்தை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள கரப்பான் பூச்சி கட்சி தலைவர்கள் மும்பையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு வந்தனர். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த அவர்கள் டெல்லிக்கு வந்திறங்கினர். டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், அதற்குள் ஏறிய போலீசார் விமானத்தில் வைத்தே கரப்பான் பூச்சி தலைவர்களை கைது செய்தனர்.

அபிஜித் தீப்கே, சவுரவ் தாஸ் மற்றும் ரங்கா ஆகியோரை போலீசார் தடுப்பு காவலில் கைது செய்துள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் சிஜேபி போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறுமா என்பதில் கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+