பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆன்லைனில் வெறுமன ஒரு நையாண்டி பக்கமாக உருவான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, இப்போது வெறும் இணைய ட்ரோல் அமைப்பாக இல்லாமல் ஒரு மக்கள் இயக்கமாக மாறி வருவதாக அதன் நிறுவனர் அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார். அவர் வரும் 6ம் தேதி இந்தியா திரும்புவதாகவும் டெல்லியில் போராட்டத்திற்கு அனுமதி கோரியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் நாட்டில் உள்ள இளைஞர்கள் தொடர்பாக சில கருத்துகளை கூறியிருந்தார். அதை தொடர்ந்து 'காக்ரோச் ஜனதா கட்சி' தொடங்கப்பட்டது. தனது பேச்சு தவறாக திரித்து பரவியதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் விளக்கம் கொடுத்தாலும் அதற்குள் இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது.

Cockroach Janata Party India politics

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சமூக வலைத்தள பக்கங்களும் குறுகிய நாட்களிலேயே அதிகபட்ச பலோயர்ஸ்களை பெற தொடங்கி, மிகப் பெரிய ஆன்லைன் இயக்கமாக மாறியது. குறிப்பாக, நீட் வினாத்தாள் லீக், வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது இந்த ஆன்லைன் இயக்கம்.

கடந்த 17 நாட்களில் இந்தியாவின் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் இளைஞர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் புதிய ஓஎஸ்எம் முறையினால் ஏற்பட்ட குளறுபடிகள் மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. இந்த விரக்தியே சிஜேபி அமைப்பை நோக்கி இளைஞர்களை ஈர்த்துள்ளது.

நையாண்டி அரசியல்

தொடக்கத்தில் ஒரு நையாண்டி அரசியல் அமைப்பாக தொடங்கப்பட்ட இது, தற்போது அடிப்படை உரிமைகளுக்கான இயக்கமாக மாறியுள்ளதாக திப்கே குறிப்பிடுகிறார். இளைஞர்களின் மனக்குமுறல்களைப் பிரதிபலிக்கும் வகையில், அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தங்களின் போராட்டங்களைத் தொடரப் போவதாக அவர் உறுதியளித்துள்ளார். கல்வித்துறையின் வெளிப்படைத்தன்மையே இந்த இயக்கத்தின் முதன்மை இலக்காக அமையும் என்று அவர் விளக்கமளித்தார்.

நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் காரணமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேபோல் சிபிஎஸ்இ மதிப்பெண் வழங்கும் முறையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் தகுதியுள்ள மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இத்தகைய சூழலில், சிஜேபி ஒரு மாற்று சக்தியாகத் தென்படுவதாகச் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

போராட்டங்கள்

இந்த கரப்பான்பூச்சி கட்சியை ஆரம்பித்த தீப்கே இப்போது வெளிநாட்டில் தங்கி படித்து வருகிறார். பலரது எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் 6ம் தேதி அபிஜீத் திப்கே இந்தியா திரும்புகிறார். மேலும், டெல்லியில் போராட்டங்களையும் நடத்த திட்டமிட்டிருக்கிறார். இந்த இயக்கத்தைச் சரியான திசையில் கொண்டு செல்வதே தனது பொறுப்பு என்று கூறியுள்ளார். சிஜேபி ஆதரவாளர்கள் இந்த இயக்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைச் சிதைய விடமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் இதற்கான ஆதரவு அலைகளாக எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த இயக்கம் இன்னும் நையாண்டி முறைகளைக் கையாண்டு அதிகார வர்க்கத்திடம் கேள்விகளை எழுப்பும் என்றும் திப்கே கூறியுள்ளார். இளைஞர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் போது மட்டுமே கல்வி முறையில் நேர்மையான மாற்றங்கள் சாத்தியமாகும் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். வரும் நாட்களில் இந்தக் கட்சி மாணவர்களின் கல்வி சார்ந்த பிரச்சனைகளைத் தேசிய அளவில் முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளைஞர்களின் உணர்வு

மேலும், சிஜேபி என்பது வெறும் அரசியல் கட்சி அல்ல, அது இளைஞர்களின் ஒடுக்கப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடு என்றும் அவர் தெரிவித்தார். நையாண்டியைக் கருவியாகக் கொண்டு, தீவிரமான சமூக மாற்றத்தை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் இறுதி நோக்கமாக இருக்கும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இந்த அமைப்புக்குத் தற்போது அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+