விடைத்தாளில் சினிமா பாடல்கள்..திருத்தும் ஆசிரியருக்கு மெசேஜ் வேற..2கே கிட்சின் அட்ராசிட்டியை பாருங்க
டெல்லி: சண்டிகர் பல்கலைகக்கழகத்தில் பயிலும் மாணவர் ஒருவர் தான், தேர்வுக்கு சரியாக படிக்காமல் வந்ததோடு விடையை திருத்தும் ஆசிரியருக்கு 'ஐஸ்' வைத்து உருக்கமான கோரிக்கையை வைத்து எழுதிய விடைத்தாள் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இதற்கு ஆசிரியர் கொடுத்த விளக்கமும் இணையத்தில் நெட்டிசன்களை ரசிக்க வைக்கும் விதமாக உள்ளது.
படிக்கும் காலத்தில் மிகவும் கடினமானது எது என்றால் தேர்வு என யோசிக்காமல் மாணவர்கள் சொல்லிவிடுவார்கள். முதல் பெஞ்ச் மாணவர்கள் வேண்டும் என்றால் விரும்பி தேர்வறைக்கு செல்லலாம்.
ஆனால், லாஸ்ட் பெஞ்ச் மாணவர்களை பற்றி சொல்லவே வேண்டாம். தேர்வு எழுதும் போது விடை தெரியாமல் தலையை சொறிந்து கொண்டு இருக்கும் மாணவர்களில் பலரும் சரி வந்தது வந்துட்டோம்...எதாவது கதை அடிப்போம் என்ற பெயரில் இஷ்டத்திற்கு எதையாவது எழுதி வைப்பதுண்டு.

இணையத்தில் பரவும் விடைத்தாள்
அதை திருத்தும் ஆசிரியர்களின் நிலமைதான் கடும் பாடாக இருக்கும். பாடப்புத்தகத்தில் ஒரு வரியைக் கூட படிக்காமல் தேர்வு அறையில் கூடுதல் பேப்பர்களை வாங்கி பக்கம் பக்கமாக எழுதும்(கதை) மாணவர்கள் சிலரையும் பள்ளி, கல்லூரி பருவ காலத்தில் பார்த்து இருப்போம். அப்படியான ஒரு தேர்வு விடைத்தாள்தான் தற்போது இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் பரவி வருகிறது.

ஆசிரியருக்கு ‘ஐஸ்’ வைத்து கோரிக்கை
பார்த்தவுடன் அனைவரையும் சிரிக்க வைக்கும் வகையில் மாணவர் ஒருவர் விடையை எழுதி வைத்து இருக்கிறார். இதற்கு ஆசிரியர் கொடுத்த விளக்கம் தான் இணையத்தில் நெட்டிசன்களை ரசிக்க வைக்கும் விதமாக உள்ளது. சண்டிகர் பல்கலைகக்கழகத்தில் பயிலும் மாணவர் ஒருவர் தான், தேர்வுக்கு சரியாக படிக்காமல் வந்ததோடு விடையை திருத்தும் ஆசிரியருக்கு 'ஐஸ்' வைத்து உருக்கமான கோரிக்கையை வைத்து இருக்கிறார்.

3 இடியட்ஸ் திரைப்படத்தின் பாடல்
அப்படி என்னதான் அந்த மாணவர் எழுதியிருக்கிறார் என்று பார்த்தால், வெறும் பாடல் வரிகளை எழுதி பக்கத்தை நிரப்பி விட்டு இருக்கிறார். மாணவர் பதில் எழுதியதே மொத்தம் மூன்று கேள்விகளுக்கு தான். அதில், இரண்டு பாடல்கள். 3 இடியட்ஸ் திரைப்படத்தின் 'கிவ் மி சம் சன்ஷைன்' பாடல் மற்றும் அமீர்கான் நடித்த பிகே படத்தின் 'பஹ்வன் ஹை கஹன் ரி டு' ஆகிய பாடல் வரிகளை விடைத்தாளில் அச்சு பிறழாமல் எழுதி வைத்து இருக்கிறார்.

மேம் நீங்கள் திறமையான ஆசிரியர்..
இறுதியாக ஆசிரியருக்கு உருக்கமாக ஒரு மெசேஜ் ஒன்றையும் கொடுத்து பக்கத்தை நிரப்பி விட்டு இருக்கிறார். ஆசிரியருக்கு ஐஸ் வைக்கும் விதமாக, "மேம் நீங்கள் மிகவும் திறமையான ஆசிரியர். கடினமாக உழைக்காதது எனது தவறுதான். கடவுளே. எனக்கு கொஞ்சம் திறமையை கொடு" என்று எழுதி வைத்துள்ளார். இந்த விடைத்தாளை திருத்திய ஆசிரியரோ... மொத்தமாக ஒரு கோடு போட்டு அடித்துவிட்டதோடு.." நீங்கள் (மாணவர்) இன்னும் கூடுதலாக விடைகளை(பாடல்கள்) எழுதியிருக்கலாம்" என்று எழுதி வைத்துள்ளார்.

நெட்டிசன்களின் கமெண்ட்ஸ்
இன்ஸ்டாகிராமில் இந்த விடைத்தாள் அடங்கிய வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் பலரும் தங்கள் கல்லூரிக் காலங்களில் இதுபோன்ற வேடிக்கையான நிகழ்வுகள் குறித்து பதிவிட்டு வருகின்றனர். அதேபோல், மாணவர் பாடல் வரியை இவ்வளவு அழகாக எழுதி வைப்பதற்கு பதிலாக கொஞ்சம் பாடப்புத்தகங்களையும் புரட்டி பார்த்து விட்டு வந்து இருக்கலாம் எனவும் ஜாலியாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications