புது நாடாளுமன்றத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிடுவதா? டென்ஷன் ஆன ஒவைசி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க
டெல்லி: புதிய நாடாளுமன்றம் சவப்பெட்டி போல இருப்பதாக ஆர்.ஜே.டி விமர்சித்தது ஏன்? என்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி இந்த கோணத்தில் விமர்சித்து இருக்கக் கூடாது என்றும் வேறு எதையாவது சொல்லியிருக்கலாம் என்றும் அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறக்க எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குடியரசுத்தலைவர்தான் புதிய நாடாளுமன்றத்தை திறக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கைக்கு செவி மடுக்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

குடியரசுத்தலைவர் புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தடைகளை கடந்து திட்டமிட்டமிட்டபடி பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை இன்று திறந்து வைத்தார். இதனிடையே, பிரதமர் மோடி தன்னை முன்னிறுத்தும் நோக்கில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வைப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை 20 எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. இதனிடையே, புதிய நாடாளுமன்றம் சவப்பெட்டி போல இருப்பதாக லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ஷக்தி சிங் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இதற்கு ஒவைசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து ஒவைசி கூறுகையில், மக்களவை சபாநாயகர்தான் நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்திருக்க வேண்டும்.
பிரதமர் மோடி திறந்து வைத்திருக்கக் கூடாது. தானே அனைத்து செய்வதாகவும் பிற யாரும் எதையும் செய்யவில்லை என்பது போல பிரதமர் மோடி காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார். தன்னை முன்னிலைப்படுத்த்திக்கொள்ளும் பிரதமரின் வழி இது. அதேவேளையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி இந்த கோணத்தில் விமர்சித்து இருக்கக் கூடாது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு டெல்லி தீ அணைப்பு சேவையிடம் இருந்து கூட பாதுகாப்பு சான்றிதழ் கூட கிடைக்கவில்லை. சவப்பெட்டி போல இருப்பதாக ஆர்.ஜே.டி விமர்சித்தது ஏன்? வேறு எதையாவது சொல்லியிருக்கலாம்" என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications