என்னது ஆர்மியா? அல்லு அர்ஜுன் மனசை புண்படுத்திட்டாரு! போலீசுக்கு ஓடிய ஸ்ரீனிவாசன்! என்ன தான் ஆச்சு?
டெல்லி: புஷ்பா-1 படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது புஷ்பா-2 படம் வெளியாக இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் நாயகனான அல்லு அர்ஜுன் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இந்திய ராணுவம் குறித்து பேசியதாக அல்லு அர்ஜுன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
திடீர் திடீர் என தென்னிந்திய சினிமா படங்கள் வெற்றி பெற்று உலக அளவில் மிரள வைத்தது. இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ பாலிவுட் தான். கேஜிஎஃப், காந்தாரா, புஷ்பா உள்ளிட்ட படங்கள் இந்தியா சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வசூலை அள்ளியது.

அந்த வகையில் புஷ்பா பார்ட்-1 படம் அல்லு அர்ஜுன் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தெலுங்கில் மட்டுமே பிரபலமாக இருந்த அல்லு அர்ஜுனை இந்தியா முழுவதும் இந்த படம் கொண்டு சேர்த்தது.
முதல் பாகத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் பெரு வெற்றி பெற்றது. இதனையடுத்து புஷ்பா 2 படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஏற்கனவே நடித்த நட்சத்திரங்களுடன் ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர். புஷ்பா முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனம் ஆடி இருந்த நிலையில், புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலிலா ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.
முதல் பாகம் வெறும் 250 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில் இரண்டாம் பாகம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. மேலும் முதல் பாகத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக பணியாற்றிய நிலையில், இரண்டாம் பாகத்திற்கு 4 இசையமைப்பாளர்கள் இணைந்துள்ளனர். அந்த வகையில், தேவி ஸ்ரீ பிரசாத், தமன், சாம் சி.எஸ். மற்றும் அஜனீஷ் லோகநாத் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர். தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
புஷ்பா 2 தி ரூல் படம் வரும் ஐந்தாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தி புஷ்பா- 2 படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் நடிகர் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் அல்லு அர்ஜுன் ரசிகர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் தனது ரசிகர்களை ஆர்மி என அழைத்தார். தனது குடும்பத்தை போன்ற ரசிகர்கள் நிச்சயம் இந்த படத்தை வெற்றி பெற வைப்பார்கள் எனவும், அவர்களுககே புஷ்பா 2 படத்தின் வெற்றியை சமர்ப்பிப்பதாக கூறினார். இந்த நிலையில் ஆர்மி தொடர்பாக பேசியதாக அல்லு அர்ஜுன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டை பாதுகாக்கும் ராணுவத்தினரை மட்டுமே ஆர்மி என அழைக்க வேண்டும், ரசிகர்களை ஆர்மி என அழைப்பது முறை கிடையாது என கிரீன் பீஸ் என்விரான்மென்ட் அண்ட் வாட்டர் ஹார்வெஸ்டிங் பவுண்டேஷன் என்ற அமைப்பின் தலைவரான ஸ்ரீநிவாசன், ஐதராபாத் ஜவகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications