வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் பிரியங்கா காந்தி- காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டெல்லி: கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமது எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் வயநாடு லோக்சபா தொகுதியில் நவம்பர் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தலில் கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். வயநாடு, ரேபரேலி இரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். ஆனால் 2 தொகுதிகளில் வெற்ற பெற்ற நிலையில் ஏதேனும் ஒன்றை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதனால் வயநாடு லோக்சபா தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். தற்போது ரேபரேலி தொகுதி எம்பியாக மட்டுமே இருக்கிறார். இதனையடுத்து வயநாடு லோக்சபா தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தலின் போதே வயநாடு லோக்சபா தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வயநாடு நிலச்சரிவின் கோரப் பிடியில் சிக்கி பல நூறு உயிர்களை பறிகொடுத்திருந்தது. இதனால் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் தேதியை இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளில் நவம்பர் 13 , நவம்பர் 20 என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ந் தேதி 288 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

அத்துடன் வயநாடு லோக்சபா மற்றும் 50 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வயநாடு லோக்சபா தொகுதிக்கான இடைத் தேர்தல் நவம்பர் 13-ந் தேதி நடைபெறும்.
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திதான் போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக பிரியங்கா காந்தியை அறிவித்துள்ளது. மேலும் பாலக்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ராகுல் மம்கூட்டத்தில், சேலக்கர சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ரம்யா ஹரிதாஸும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications