கர்நாடகா முதல்வர் சித்தராமையா; துணை முதல்வர் டிகே சிவகுமார்- காங். அதிரடி அறிவிப்பு
டெல்லி: கர்நாடகா முதல்வராக சித்தராமையா; துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2024-ம் ஆண்டு வரை கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் டிகே சிவகுமார் பதவி வகிப்பார் எனவும் ஒரே ஒரு துணை முதல்வர் பதவி மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது எனவும் காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ். ஆனால் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் முடிவு எடுக்க முடியாமல் கடந்த 5 நாட்களாக காங்கிரஸ் தலைமை திணறி வந்தது. இதனால் டெல்லியில் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் முகாமிட்டு விடிய விடிய ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைகளின் முடிவில் சித்தராமையா முதல்வராகவும் டிகே சிவகுமார் துணை முதல்வராகவும் முடிவு செய்யப்பட்டது. டெல்லியில் இன்று செய்தியாளர்களை காங்கிரஸ் பொதுச்செயலாலர் வேணுகோபால் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது கர்நாடகா முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டதை அதிகாரப்பூர்வமாக வேணுகோபால் அறிவித்தார். மேலும் துணை முதல்வராக டிகே சிவகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்; ஒரே ஒரு துணை முதல்வர் பதவிதான் என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் வேணுகோபால் கூறினார்.
வரும் 20-ந் தேதி பெங்களூருவில் சித்தராமையா, டிகே சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்; இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ஒத்த கருத்துள்ள தலைவர்கள் அனைவரும் அழைக்கப்படுவர் என்றும் கேசி வேணுகோபால் தெரிவித்தார்.
மேலும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு சித்தராமையா, டிகே சிவகுமார் இருவரும் பாடுபட்டனர்; இருவருமே காங்கிரஸ் கட்சியின் சொத்துகள்தான். காங்கிரஸ் கட்சியில் முழுமையாக கருத்து ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே ஆலோசனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டன என்றார் கேசி வேணுகோபால்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications