உச்சநீதிமன்றத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து பிழையான அறிக்கையை தாக்கல் செய்த மத்திய அரசு
டெல்லி: உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்பாக உச்சநீதிமன்றதிதில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில் பிழை இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
B.1.617 என்ற கொரோனா வைரஸை இந்தியாவின் உருமாறிய கொரோனா வைரஸ் என ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அத்துடன் B.1.617 வைரஸை இந்தியாவின் உருமாறிய கொரோனா வைரஸ் என குறிப்பிடக் கூடாது; இது தேசத்தின் மதிப்பை சீர்குலைக்கிறது எனவும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பாக விளக்கம் அளித்திருந்த உலக சுகாதார நிறுவனமும் தங்களது அறிக்கையில் அப்படி எதுவும் குறிப்பிடவில்லை என தெரிவித்திருந்தது.
மத்திய அரசு இப்படி விளக்கம், எச்சரிக்கை கொடுப்பதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக கொரோனா வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்திருந்தது. அதில் இந்தியாவின் உருமாறிய கொரோனா வைரஸ் என்றே மத்திய அரசு குறிப்பிட்டிருக்கிறது.
இதனை காங்கிரஸ் மூத்த தலைவர்களான பவன் கெரா, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் தமது ட்விட்டர் பக்கத்தில், எங்களுடைய சகா பவன் கெரா, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இந்தியாவின் உருமாறிய கொரோனா வைரஸ் என குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.
உலக நாடுகளை அப்படி எல்லாம் சொல்லக் கூடாது என கூறுகிற மத்திய அரசே அப்படியான ஒரு வார்த்தையை பயன்படுத்தி உள்ளது. அதேபோல் இங்கிலாந்தின் உருமாறிய கொரோனா வைரஸ் என்றும் அந்த பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது என கூறியுள்ளார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications