மாலை போடுவது போல் வந்து.. காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமாரை தாக்கிய நபர்கள்.. களேபரமான இடம்
டெல்லி: மாலை அணிவிப்பது போல் வந்து வடகிழக்கு டெல்லி லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமாரை தாக்கிய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ தற்போது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
டெல்லியில் மொத்தம் 7 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்கு மே 25ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது.

இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் டெல்லியில் ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டுகின்றன. பாஜக தனித்து போட்டியிடுகிறது.
அதன்படி ஆம்ஆத்மி கட்சி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதில் வடகி்ழக்கு டெல்லி லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கன்னையா குமார் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் தான் கன்னையா குமார் நேற்று தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் டெல்லி கர்தார் நகரில் உள்ள ஆம்ஆத்மி கட்சியின் அலுவலகத்துக்கு சென்றார். ஆம்ஆத்மி கட்சியின் கவுன்சிலர் சாயா சர்மாவை சந்தித்து ஆதரவு கோரினார். அதன்பிறகு ஆம்ஆத்மி அலுவலகத்தில் இருந்து அவர் வெளியே வந்தார்.
அப்போது கன்னையா குமாருக்கு தொண்டர்கள் மாலை அணிவித்தனர். இந்த வேளையில் கன்னையா குமார் பத்திரிகையாளருக்கு பேட்டியளித்தபடி மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மாலை அணிவிப்பது போல் வந்த நபர் திடீரென்று கன்னையா குமாரை தாக்கினார். இதையடுத்து மேலும் சிலர் கன்னையா குமாரை தாக்கினர். அவர் மீது கருப்பு மை ஊற்றப்பட்டது.
உடனடியாக சுதாரித்து கொண்ட கட்சியினர் கன்னையா குமாரை சட்டென மீட்டு அவரை சூழ்ந்து கொண்டனர். இதற்கிடையே தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கிருந்து ஓடினர். முன்னதாக சில நபர்கள் ஆம்ஆத்மி கட்சியின் மாநகராட்சி பெண் கவுன்சிலரான சயா சர்மாவிடம் தவறாக நடந்து கொண்டனர். பெண் கவுன்சிலர் அணிந்திருந்த ஷாலை சிலர் பிடித்து இழுத்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட அவரது கணவரை மிரட்டி உள்ளனர்.
அதோடு கூட்டத்தில் கருப்பு மையை ஊற்றியுள்ளனர். இதில் 4 பெண்கள் வரை காயமடைந்தனர். இந்த சம்பம் கர்தார் நகரில் உள்ள ஆம்ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடந்தது. அதுதொடர்பாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து டெல்லி வடகிழக்கு துணை போலீஸ் கமிஷனர் கூறுகையில், ‛‛கன்னையா குமார் கவுன்சிலர் சயா சர்மாவை சந்தித்துவிட்டு வெளியே வந்தார். அப்போது அவருக்கு மாலை அணிவிப்பது போல் சிலர் தாக்கியதோடு, மை ஊற்றியுள்ளனர். அதேபோல் சயா சர்மாவை மிரட்டியுள்ளனர். விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.
இதற்கிடையே தான் 2 நபர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் கன்னையா குமார் மீது தாக்குதல் நடத்தியது நாங்கள் தான் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வீடியோவில், ‛‛கன்னையா குமார் நாட்டை பிரிக்கும் வகையில் பேசி வருகிறார். இந்திய ராணுவத்துக்கு எதிராக பேசுகிறார். இதனால் தான் அவரை இன்று கவனித்தோம். நாங்கள் நாட்டை பிரித்து பேச விடமாட்டோம். நாட்டை பிரித்து பேசுபவரை டெல்லிக்குள் அனுமதிக்க மாட்டோம்'' என தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு போலீசார் அவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே சம்பவம் தொடர்பாக கன்னையா குமார் வெளியிட்ட அறிக்கையில், ‛‛இந்த சம்பவத்தின் பின்னணியில் என்னை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் சிட்டிங் எம்பியான மனோஜ் திவாரி தான் உள்ளார். அவரது உத்தரவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது'' என குற்றம்சாட்டி உள்ளார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications