காங். முதல்வர் வேட்பாளர்கள்: ம.பி. கமல்நாத்- சிந்தவாரா; சத்தீஸ்கர் பூபேஷ் பாகெல் - பதானில் போட்டி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் கமல்நாத், சிந்தவாரா தொகுதியிலும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் மீண்டும் பதான் தொகுதியிலும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் 30, தெலுங்கானாவில் 55, மத்திய பிரதேசத்தில் 144 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

 Congress Candidates List:M.P KamalNath-Chhindwara; Chhattisgarh Bhupesh Baghel -Patan

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் கமல்நாத் சிந்தவாரா தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கின் சகோதரர் லக்ஷ்மண் சிங் சச்சௌரா தொகுதியில் போட்டியிடுகிறார். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை பாஜக வேட்பாளராக நிறுத்திய புத்னி தொகுதியில் விக்ரம் மஸ்தலை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. சுர்ஹாட்டில் அஜய் சிங் ராகுல், ராவ் தொகுதியில் ஜிது பட்வாரி, அட்டரில் ஹேமந்த் கட்டாரே, ஜபுவாவில் விக்ராந்த் பூரியா ஆகியோர் போட்டியிடுகின்றனர். 30 பழங்குடிகள் மற்றும் 22 தனித் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் நவம்பர் 17-ந் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்டு டிசம்பர் 3-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், பதான் தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2003-ம் ஆண்டு முதல் போட்டியிட்டு வென்றவர் பாகெல். இத்தொகுதியில் தமது உறவினரான பாஜகவின் விஜய் பாகெலை, பூபேஷ் பாகெல் எதிர்கொள்கிறார். துணை முதல்வர் டிஎஸ் சிங் தியோ தனது கோட்டையான அம்பிகாபூரில் மீண்டும் போட்டியிடுகிறார். மூத்த காங்கிரஸ் தலைவர் அமர்ஜீத் பகத், சீதாப்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் அமர்ஜீத் பகத், 4 முறை வென்றுள்ளார். தற்போது அறிவிக்கப்பட்ட 30 வேட்பாளர்களில் 14 பேர் எஸ்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் 3 பெண்களும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரில், நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று, டிசம்பர் 3-ந் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

 Congress Candidates List:M.P KamalNath-Chhindwara; Chhattisgarh Bhupesh Baghel -Patan

தெலுங்கானா: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் 55 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. கோடங்கல் தொகுதியில் அனுமுலா ரேவந்த் ரெட்டியும், ஹுசூர்நகர் தொகுதியில் உத்தம் குமார் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். முலுகுவில் தாசரி சீதக்கா, மேடக்கில் மைனம்பள்ளி ரோஹித் ராவ் மற்றும் மைனம்பள்ளி ஹனுமந்த் ராவ் ஆகியோர் களம் காணுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+