"மோடி அரசு சீக்கிரம் கவிழும்.." கார்கே திட்டவட்டம்.. ஆனா அடுத்து சொன்னது தான் பெரிய ட்விஸ்ட்.. ஆஹா!
டெல்லி: மத்தியில் இப்போது பாஜக தலைமையிலான என்டிஏ அரசு அமைந்துள்ள நிலையில், இந்த என்டிஏ அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக அதிகபட்சமாக 240 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருந்தது.

இருப்பினும், கடந்த 2 தேர்தல்களைப் போலத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் என்டிஏ கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தனர்.
கார்கே: இதற்கிடையே என்டிஏ அரசு உருவானதே தவறு என்ற மல்லிகார்ஜுன கார்கே, என்டிஏ கூட்டணி எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்றும் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "என்டிஏ அரசு ஏதோ தெரியாமல் உருவான கூட்டணி.. மோடிக்கு ஆட்சி அமைக்க எந்தவொரு தார்மீக உரிமையும் இல்லை.. இது ஒரு மைனாரிட்டி அரசு. இந்த அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்.
ட்விஸ்ட்: ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பாதியிலேயே கவிழ்ந்தால் அது நாட்டிற்கு நல்லது இல்லை. எனவே, இந்த அரசு தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அது நாட்டிற்கு நல்லது. நாம் ஒன்றிணைந்து நமது நாட்டை பலப்படுத்த வேண்டும். ஆனால், எதாவது நன்றாகச் சென்று கொண்டு இருந்தால் அதைத் தொடர பிரதமர் விட மாட்டார். அதுவே அவரது பழக்கம்.. ஆனால், நாட்டைப் பலப்படுத்த நாங்கள் ஒத்துழைப்போம்" என்று அவர் தெரிவித்தார்.
ஜேடியு பதிலடி: கார்கேவின் இந்த விமர்சனத்திற்கு என்டிஏ கூட்டணியில் உள்ள ஜேடியு பதிலடி கொடுத்துள்ளது. நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரும் இதுபோல கூட்டணி ஆட்சியையே அமைத்ததாக குறிப்பிட்ட ஜேடியு, இந்தக் கூட்டணி அரசு நிச்சயம் 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் என அவர் உறுதியளித்தார்.
காங்கிரஸ்: 1991 லோக்சபா தேர்தல் சமயத்தில் பாஜகவைப் போலவே காங்கிரஸும் 244 சீட்களில் வென்றது. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில் நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி அரசை அமைத்தது. கூட்டணி கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சியைத் தக்கவைக்க முடியும் என்ற சூழலே அப்போது இருந்தது.
24 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறி.. நீட் முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும்: கார்கே
அதன் பிறகு நடந்தது தான் ட்வஸ்ட்.. அதாவது கூட்டணியில் சின்ன சின்ன கட்சிகளில் பிளவுகள் ஏற்பட்டன. அவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இதன் மூலம் இரண்டு ஆண்டுகளில் சிறுபான்மை அரசாக இருந்த காங்கிரஸ் பெரும்பான்மை கட்சியாக மாறியது.. இதைக் குறிப்பிட்ட ஜேடியு கட்சியைச் சேர்ந்த நீரஜ் குமார், இது தான் காங்கிரஸ் வரலாறு என்றும் அப்படியிருக்கும் போது அவர்கள் மற்ற கூட்டணிக் கட்சிகள் பற்றிப் பேச எந்தவொரு தார்மீக உரிமையும் இல்லை என்று சாடினர்.
என்டிஏ கூட்டணி: என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மோடி இப்போது மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுள்ளார். நேருவுக்குப் பிறகு ஒருவர் பிரதமராகப் பதவியேற்பது இதுவே முதல்முறையாகும். 240 சீட்களில் இப்போது பாஜக வென்றுள்ள நிலையில், ஆட்சி அமைக்க என்டிஏ கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் தேசம் (16 சீட்), ஜேடியு (12 சீட்) மற்றும் ஷிண்டே சிவசேனாவின் (7 சீட்) ஆதரவு நிச்சயம் தேவை என்ற சூழல் உருவாகி இருக்கிறது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications