24 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறி.. நீட் முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும்: கார்கே
டெல்லி: 24 லட்சம் மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய நீட் முறைகேடு குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வு குறித்து தமிழக அரசு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், தேசிய அளவில் தற்போது நீட் தேர்வுக்கு எதிராக குரல்கள் எழுந்திருக்கின்றன. இதற்கு காரணம் சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள்தான். அதாவது, தேர்வு எழுதியவர்களில் 1500 பேருக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன.

67 தேர்வர்கள், 720 என்ற முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதற்கு முன்னர் யாரும் இப்படி பெற்றதில்லை. ஒரே மையத்தில் இருந்து அதிகம் பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளதும் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.
எனவே நீட் தேர்வுக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு பணம் பெற்றுக்கொண்டு நடத்தப்படுகிறது. இதில் பல முறைகேடுகள் நடக்கின்றன. சமீபத்திய தேர்வு முடிவுகள் தங்கள் மாநில மாணவர்களுக்கு அநீதியாக அமைந்துள்ளது என்று கூறி, நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மகாராஷ்ட்ரா அரசு வலியுறுத்தியுள்ளது.
விவகாரம் பெரியதாக வெடித்த நிலையில், மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி, நீட் முறைகேடு குறித்து விசாரிக்கப்படும் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. 6 தேர்வு மையங்களில் மட்டும் தான் பிரச்னை நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளதால் மறு தேர்வு நடத்த வேண்டியதில்லை. நீட் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள உயர்கல்வித் துறை செயலாளர், முறைகேடு புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும்.
30 நிமிடங்கள் தேர்வு நேரம் குறைவாக இருந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இதன் மூலம் மாணவர்கள் 718, 719 மதிப்பெண்களும், 6 பேர் முழு மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கருணை மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை" என்று கூறியிருந்தார்.
ஆனால் இவரது விளக்கத்தை மாணவர்கள் ஏற்கவில்லை. எனவே போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேபோல நீட் தேர்வு முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என காங்கிரஸின் ராகுல் காந்தி கூறியிருந்தார்.
இந்நிலையில், நீட் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
"நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் மட்டும் பிரச்சனை இல்லை. இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளன, ஆவணங்கள் கசிந்துள்ளன, ஊழல் நடந்துள்ளது. மோடி அரசின் நடவடிக்கையால் நீட் தேர்வில் பங்கேற்கும் 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தேர்வு மையம் மற்றும் பயிற்சி மையங்கள் புற்றீசல்கள் போல உருவாகி, 'பணம் செலுத்துங்கள், வினாதாள்களை பெறுங்கள்' என்ற விளையாட்டை விளையாடி வருகிறது.
மோடி அரசாங்கம் தனது நடவடிக்கைகளின் பொறுப்பை, தேசிய தேர்வு முகமையின் தோள்களில் சுமத்திவிட்டு தப்பித்துக்கொள்ள முடியாது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோருகிறது.
விசாரணைக்குப் பிறகு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் மற்றும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் மோசடி மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அரசு சீரழித்துள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications