அதெப்படி குலாம் நபி ஆசாத்? ஏன் கார்கே இல்லை? ஒரே நாடு ஒரே தேர்தல் குழுவில் இடம் பெற காங். மறுப்பு!
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக அரசு அறிவித்த ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆராயும் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவில் இடம்பெறுவதற்கு காங்கிரஸ் மறுத்துவிட்டது. காங்கிரஸில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் அக்குழுவில் இடம்பெற்றுள்ளதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆனால் மத்திய அரசு திடீரென நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 22 வரை நடத்த உள்ளது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இம்மசோதா நிறைவேறினால் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில சட்டசபைகளும் கலைக்கப்பட்டு லோக்சபா தேர்தலுடன் ஒரே தேர்தலாக நடத்தப்படும் நிலைமை உருவாகும். இதனை எதிர்க்கட்சிகள் மிக கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இக்குழுவில் இடம் பெறும் உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, லோக்சபா காங். தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, காங்கிரஸில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் இடம் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது.
ஆனால் மத்திய அரசின் இந்தக் குழுவில் இடம்பெற முடியாது என காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அனுப்பிய கடிதத்தில், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த குழுவில் இடம்பெறவில்லை. இது நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைப்பதாகும். மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பதில் தனிக்கட்சி தொடங்கிய குலாம் நபி ஆசாத்தை அக்குழுவில் இடம்பெறச் செய்திருப்பது ஏற்க முடியாது. ஆகையால் மத்திய அரசு குழுவில் காங்கிரஸ் இடம் பெற முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications