‛‛எக்சிட் போல்’’ விவாதத்தை புறக்கணித்த காங்கிரஸ்.. காரணம் என்ன தெரியுமா? கிண்டல் செய்த அமித்ஷா
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தொடர்பான இன்றைய ஊடக விவாதங்களில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என அறிவித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கிண்டல் செய்துள்ளார்.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய லோக்சபா தேர்தல் கடந்த
இன்றுடன் முடிவுக்கு வர உள்ளது. இன்று கடைசி கட்ட லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவுக்கு வர உள்ளது. வரும் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் தான் இன்று மாலை 6 மணிக்கு தேர்தல் முடிவடைந்த பிறகு தேர்தலுக்கு பிந்தைய லோக்சபா தேர்தல் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த நிலையில் தான் காங்கிரஸ் கட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்பான ஊடக விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்காது என்று தெரிவித்துள்ளது. ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு ஊடக விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்தார்.
இந்நிலையில் தான் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு தொடர்பான விவாதங்களில் பங்கேற்க மாட்டோம் எனக்கூறிய காங்கிரஸ் கட்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கும் போக்கில் உள்ளது.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் நாங்கள் பெரும்பான்மையை பெறப்போகிறோம் என பிரசாரம் செய்தார். ஆனால் உண்மையில் அவர்களுக்கு என்ன நிலை என்பது தெரியும். அவர்களால் மீடியாவை எதிர்கொள்ள முடியாது. இதனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு விவாதத்தை புறக்கணிக்கிறார்கள்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் என்பது நீண்டகாலமாக நடந்து வருகிறது. அதில் காங்கிரஸ் தோற்கிறது. இந்த முறையும் தோல்விக்கு விளக்கம் அளிக்க முடியாது என்பதால் காங்கிரஸ் கட்சி இந்த விவாதத்தில் பங்கேற்காமல் புறக்கணிக்கிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்ற காலம் முதல் இன்று வரை அவர்கள் இத்தகைய மறுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்'' என விமர்சனம் செய்தார்.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications