வயநாடு தந்த வெற்றி.. நாடாளுமன்றத்திற்குள் அடியெடுத்து வைத்தார் பிரியங்கா.. எம்பியாக பதவியேற்றார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வயநாடு லோக்சபா தொகுதி எம்பியாக பிரியங்கா காந்தி பதவியேற்றுக்கொண்டார். லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பிரியங்கா காந்திக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அரசியல் சாசனப் புத்தகத்தை கைகளில் ஏந்தியபடி பிரியங்கா காந்தி எம்பியாக பதவியேற்றார். கடந்த 20 ஆம் தேதி நடந்த வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா வரலாற்று வெற்றி பெற்றிருந்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற விதி இருப்பதால் ராகுல் காந்தி வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார்.

wayanad priyanka gandhi congress politics

இதையடுத்து வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பாக பிரியங்கா காந்தி போட்டியிட்டார். கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் 23ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்துடன் வரலாற்று வெற்றியை பிரியங்கா காந்தி பெற்றார். பிரியங்கா காந்தி மொத்தம் 6,22,338 - வாக்குகள் பெற்றார்.

வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ், இடது முன்னணி, பா.ஜனதா இடையே மும்முனை போட்டி நிலவியது. 3 வேட்பாளர்களை தவிர, போட்டியிட்ட பிற கட்சி வேட்பாளர்கள் 5 பேர், 8 சுயேச்சை வேட்பாளர்கள் ஆகிய 13 பேரும் டெபாசிட் இழந்தனர்.

பிரியங்கா காந்தி இதுவரை நேரடி அரசியலில் களம் கண்டது இல்லை. தனது தாயார் சோனியா காந்தி, சகோதரர் ராகுல் காந்திக்கு பிரசாரம் மட்டுமே செய்து வந்த பிரியங்கா காந்தி முதல் முறையாக வயநாடு தேர்தலில் வென்றதன் மூலம் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று பிரியங்கா காந்தி நாடாளுமன்ற எம்பியாக பதவியேற்றுக் கொண்டார். அரசியல் சாசனப் புத்தகத்தை கைகளில் ஏந்தியபடி பிரியங்கா காந்தி எம்பியாக பதவியேற்றார்.

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பிரியங்கா காந்திக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரியங்கா காந்தி எம்பியாகி இருப்பது காங்கிரஸ் கட்சியினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. நாடாளுமன்றத்திகு ராகுல் காந்தி பிரியங்காவின் கையை பிடித்து அழைத்து வந்தார். அவர் பதவியேற்றதும், காங்கிரஸ் எம்பிக்கள் உற்சாக முழக்கம் எழுப்பினர். லோக்சபாவில் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் பிரியங்கா காந்தியின் வருகை இருக்கும் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+