வெற்றி மிதப்பில் பாஜக.. 4 மாநில தேர்தலில் காங்கிரஸ்தான் மொத்தமாக அதிக ஓட்டு வாங்கியது தெரியுமா?
டெல்லி: சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றிய மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறது பாஜக. தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிவிட்டது.
மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிக்கும் காங்கிரஸ் சந்தித்த தோல்விகளுக்கும் ஏராளமான காரணங்கள் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் களைகட்டி வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க தேர்தல் புள்ளி விவரங்களை வைத்தும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

நமது கண்ணில் "நடந்து முடிந்த 4 மாநிலத் தேர்தல்ல காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 4,90,69,462; பாஜக பெற்ற வாக்குகள் 4,81,29,325 இப்ப சொல்லுங்க. மக்கள் யார் பக்கம்??" என்ற ஒரு பதிவும் தென்பட்டது. இது உண்மைதானா? என சற்றே புள்ளி விவரங்களை ஆராய்ந்து பார்த்தோம்.
சத்தீஸ்கர் மாநிலம்:
பாஜக பெற்ற வாக்குகள்: 7,234,968
காங்கிரஸ் பெற்ற வாக்குகள்: 6,602,586
மத்திய பிரதேச மாநிலம்:
பாஜக பெற்ற வாக்குகள்: 2,11,08,771
காங்கிரஸ் பெற்ற வாக்குகள்: 1,75,64,353
ராஜஸ்தான் மாநிலம்:
பாஜக பெற்ற வாக்குகள்: 16,523,568
காங்கிரஸ் பெற்ற வாக்குகள்: 15,666,731
தெலுங்கானா மாநிலம்:
பாஜக பெற்ற வாக்குகள்: 3,257,511
காங்கிரஸ் பெற்ற வாக்குகள்: 9,235,792
4 மாநில தேர்தல்களில் பாஜக பெற்ற மொத்த வாக்குகள்: 4,81,24,818
4 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற மொத்த வாக்க்கள்: 4,90,69,462
தேர்தல் அரசியல் என்பது சொற்ப வாக்கு சதவீதத்தில் பெரும் வெற்றியைத் தரக் கூடியதுதான். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸைவிட 8% கூடுதலாக வாக்கு பெற்ற பாஜக 99 இடங்களை கூடுதலாகவும் அள்ளியது என்பதும் நினைவில் கொள்வோம்.
-
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications