ராகுலுக்காக களமிறங்கும் காங்கிரஸ்.. தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் மெகா திட்டம்
டெல்லி: அம்பேத்கர் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படும் விவகாரத்தில் அமித்ஷாவிடம் இருந்து மத்திய அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும். 2 எம்பிக்களின் மண்டை உடைந்தது தொடர்பாக ராகுல் காந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் இன்று கடைசி நாளாகும். இதற்கிடையே தான் தற்போது ஆளும் பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தான் காரணம். அதாவது சமீபத்தில் அமித்ஷா, ராஜ்யசபாவில் அம்பேத்கர் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் அமித்ஷா மன்னிப்பு கோரி தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தையும் எதிர்க்கட்சியினர் முடக்கி வருகின்றனர். நேற்றைய தினம் நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக வந்தபோது அவர்களுக்கும் பாஜக எம்பிக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஜக எம்பிக்கள் சந்திர சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோரின் மண்டை உடைந்தது. ராகுல் காந்தியால் தான் அவர்களின் மண்டை உடைந்ததாக புகாரளிக்கப்பட்டது. அந்த புகாரில் ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தான் நாடு முழுவதும் இன்று 2வது நாளாக காங்கிரஸ் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களின் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சியின் இன்று போராட்டம் நடத்த உள்ளனர். அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய அமித்ஷாவிடம் மத்திய அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்றும், பாஜக எம்பிக்களை தாக்கியதாக ராகுல் காந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யவும் வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்தப்பட உள்ளது.
அதோடு காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல், சாலை மறியலில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் சில இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட பிரச்சனையால் இன்று எந்த கட்சியினரும் நாடாளுமன்ற நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தக்கூடாது என்று லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ளார். ஆனால் இன்று குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாள் என்பதால் எதிர்க்கட்சியினர் தடையை மீறி போராட்டம் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. இதனால் காலையிலேயே நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications