பிரதமர் மோடி மக்கள் குரலை கேட்பதில்லை.. அக்னிபாத் திட்டம் அவசர கதியிலானது! ராகுல், பிரியங்கா சாடல்
டெல்லி: மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், இது குறித்து ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளனர்.
Recommended Video
நாட்டில் இதுவரை முப்படைகளுக்கும் நேரடியாகவே ஆட்கள் சேர்ப்பு நடைபெற்றது. இதனிடையே சமீபத்தில் மத்திய அரசு புதிய ராணுவ ஆட்சேர்பு கொள்கையை அறிவித்தது.
அக்னிபாத் என்ற இத்திட்டத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். அக்னிபாத் திட்டம் மூலம் ராணுவம், கடற்படை, விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு நடைபெறும்.

அக்னிபாத்
இத்திட்டத்திற்கு வயது வரம்பாக 17.5 வயது முதல் 21 நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் சேர்பவர்கள் அக்னிவீர் என அழைக்கப்படுவர். இத்திட்டத்தில் ஒருவர் நான்கு ஆண்டுகள் பணியில் இருக்கலாம். நான்கு ஆண்டுகள் முடிந்த பிறகு, 80% பேர் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படுவர். 20% மட்டும் பேர் ராணுவப் பணியைத் தொடர முடியும். பணி முடியும் போது இவர்களுக்கு ஒருமுறை மட்டும் கொடுக்கப்படும் தொகுப்பு வழங்கப்படும்.

போராட்டம்
இந்த புதிய திட்டம் குறித்து நாடு முழுவதும் பெரும் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இந்தத் திட்டத்தைக் கடுமையாகச் சாடியுள்ளன. அதேபோல பல வட மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. பீகார், ராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தை மிகத் தீவிரமாக முன்னெடுத்துள்ளனர். குறிப்பாகப் பீகாரில் ரயில்களும் தீ வைக்கப்பட்டன.

விளக்கம்
இப்போது இந்தப் போராட்டம் மெல்லத் தென் மாநிலங்களுக்கும் பரவி வருகிறது. ஹைதராபாத்தில் சில இடங்களில் போராட்டம் மெல்ல ஆரம்பித்துள்ளது. இதையடுத்து இந்த ஓராண்டிற்கு மட்டும் பணியில் சேரும் அதிகபட்ச வயதை 21ஆக உயர்த்தி மத்திய அரசு, இது குறித்து விளக்கும் Myth vs Fact document விளக்க அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. இருப்பினும் போராட்டம் ஓய்ந்ததாகத் தெரியவில்லை

ராகுல் காந்தி சாடல்
இந்நிலையில் அக்னிபாத் திட்டம் குறித்து ராகுல் காந்தி மீண்டும் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "அக்னிபாத் - இளைஞர் நிராகரித்தனர்.. விவசாய சட்டம் - விவசாயிகள் நிராகரித்தனர்.. பணமதிப்பு நீக்கம் - பொருளாதார நிபுணர்கள் நிராகரித்தனர்.. ஜிஎஸ்டி - வர்த்தகர்கள் நிராகரித்தனர். நாட்டு மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது பிரதமருக்குப் புரியவில்லை, ஏனென்றால் அவர் தனது நண்பர்களின் குரலைத் தவிர வேறு எதையும் கேட்கவில்லை" என்று சாடியுள்ளார்.

பிரியங்கா காந்தி
அதேபோல காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் அக்னிபாத் திட்டத்தைச் சாடியுள்ளார். அவர் தனது ட்விட்டரில், "புதிய ராணுவ ஆள்சேர்ப்பு விதிகளை பாஜக அரசு மாற்றியமைத்து 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அதாவது அவசர அவசரமாக இளைஞர்கள் மீது இத்திட்டம் திணிக்கப்படுகிறது.

பழைய முறை
பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். விமானப்படையில் நிறுத்தப்பட்ட ஆட்சேர்ப்பை உடனடியாக தொடங்குங்கள். ராணுவ ஆட்சேர்ப்பை (வயது தளர்வுடன்) முன்பு போல் செய்யுங்கள்" விமர்சித்துள்ளார்.
-
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications