பஞ்சாப் தேர்தல்..அனைத்து சமூகங்களையும் குறி வைத்து..காங். போடும் மாஸ்டர் பிளான்.. ஒர்க்அவுட் ஆகுமா?
டெல்லி: பஞ்சாப் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், முதல்வர் வேட்பாளர் தொடர்பாகக் காங்கிரஸ் கட்சி முக்கிய முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களிலுமே பாஜகவே ஆட்சியில் உள்ளது.
பஞ்சாபில் பாஜகவும் வலுவான கட்சியாக இல்லை. இதன் காரணமாகப் பஞ்சாப் மாநிலத்தில் எப்படியாவது ஆட்சியைத் தக்க வைத்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் களமிறங்குகிறது.

சரண்ஜித் சிங் சன்னி
இதன் காரணமாகத் தான் எதிர்ப்புகள் அதிகமான போது கேப்டன் அமீரிந்தர் சிங்கை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியது காங்கிரஸ் தலைமை. அவருக்குப் பதிலாக சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டார். பஞ்சாப் மாநிலத்தில் தலித்துகள் சுமார் 30% வரை இருப்பதால் சரண்ஜித் சிங் சன்னி நியமனம் காங்கிரஸ் கட்சிக்குப் பெரியளவில் வாக்குகளை வாங்கி தரும் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே, சரண்ஜித் சிங் சன்னியை முன்னிலைப்படுத்தியே காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.

முக்கிய முடிவு
இந்தச் சூழ்நிலையில், பஞ்சாப் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், முதல்வர் வேட்பாளர் தொடர்பாகக் காங்கிரஸ் கட்சி முக்கிய முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகக் காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் இறுதி முடிவு எடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாநிலத்தில் முதல் தலித் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை முன்னிலைப்படுத்தாமல் போனால் வாக்கு வங்கி எந்தளவு பாதிக்கும் என்பது குறித்தும் தலைமை தீவிர ஆலோசனையில் உள்ளது.

என்ன காரணம்
இருப்பினும், இதர சாதியினரின் வாக்குகளும் கிடைக்க வேண்டும் என்றால் பொதுவான தலைமையை வைத்துக் கொண்டு தேர்தலை அணுகுவதே சிறந்த முடிவாக இருக்கும் எனக் காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் ஸ்கிரீனிங் கமிட்டி தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. அதில் பெரும்பாலான தலைவர்கள் ஒருவரை முன்னிறுத்தாமல் தேர்தலை எதிர்கொள்வதே சிறப்பான முடிவாக இருக்கும் எனத் தெரிவித்ததாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல சமூகம்
இதன் காரணமாகக் காங்கிரஸ் தலைமை முதல்வர் வேட்பாளராக யாரையும் அறிவிக்காமல் தேர்தலை எதிர்கொள்வது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தலித் முகமாக இருக்கும் சரண்ஜித் சிங், தலித் சமூக வாக்குகளைப் பெற்றுத் தர வாய்ப்புள்ளது, ஆனால் பஞ்சாபில் ஜாட் சீக்கியர்கள் மற்றும் இந்துக்களின் வாக்குகளும் கணிசமாக அதிகம் என்பதால் வாக்குகள் பிரியக் கூடாது என்பதில் காங்கிரஸ் கவனமாக உள்ளது.

காங்கிரஸ் முடிவு
இதனால் தான் இதர முக்கிய பொறுப்புகளில் பல சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்குப் பொறுப்பு கொடுத்துள்ளது காங்கிரஸ் தலைமை. பஞ்சாப் காங்கிரஸின் தலைவராக ஜாட் சீக்கியரான நவ்ஜோத் சிங் சித்துவையும், தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவராக ஜாட் இனத்தைச் சேர்ந்த சுனில் ஜாக்கரையும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், துணை முதல்வரான சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா ஒரு ஜாட் சீக்கியர், மற்றொரு துணை முதல்வரான ஓபி சோனி இந்து சமூகத்தைச் சேர்ந்தவர். இதன் மூலம் அனைத்து பெரும்பான்மையான சமூகங்களுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளது காங்கிரஸ் தலைமை!

தீவிர ஆலோசனை
மறுபுறம் காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது தொடர்பாகத் தொகுதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. இதுவரை, வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக ஸ்கிரீனிங் கமிட்டியின் இரண்டு கூட்டங்கள் தேசிய தலைநகரில் நடத்தப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு சீட் மட்டுமே வழங்கப்படும் என்பதில் காங். தலைமை தெளிவாக உள்ளது. இது தொடர்பாக காங். கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஏற்கனவே கூறுகையில், "காங்கிரஸ் ஜனநாயக கட்சி. தகுதி அடிப்படையிலேயே போட்டியிட சீட் வழங்கப்படும். வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்போம்" எனத் தெரிவித்திருந்தார்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications