10 ஆண்டுகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசியின் 5.1 லட்சம் வேலைவாய்ப்புகளை பறித்த மோடி அரசு: கார்கே காட்டம்!
டெல்லி: பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்ததன் மூலம் தலித், பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்காக 5.1 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுவிட்டன என காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டி உள்ளார். மேலும் அரசு நிர்வாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின்னணியில் இருந்து வந்த தனியார் நிறுவன உயர் அலுவலர்களை அரசின் செயலாளர்கள், மற்றும் உயர் அதிகாரிகளாக நியமனம் செய்யும் திட்டத்தை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி குற்றம் சாட்டி உள்ளார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது இடஒதுக்கீடு இல்லாமல் 45 மத்திய அரசு அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதாக அறிவிக்கை வெளியிட்டிருந்தது கடும் எதிர்ப்புக்குள்ளாக்கி இருக்கிறது. மத்திய அரசின் இந்த அறிவிக்கைக்குக் கண்டனம் தெரிவித்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தலித்துகள், பழங்குடிகள், இதர் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீதான மோடி அரசின் நேரடித் தாக்குதல் இது என விமர்சித்திருந்தார்.

5.1 லட்சம் வேலைவாய்ப்பு பறிப்பு: பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, 10 ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்ததன் மூலம் தலித்துகள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 5.1 லட்சம் வேலைவாய்ப்புகளை மோடி அரசு பறித்துவிட்டது. அரசு அதிகாரிகளை ஆர்.எஸ்.எஸ். மூலம் நேரடியாக நியமனம் செய்கிறது மோடி அரசு என சாடியிருந்தார்.
சமூக நீதியை குழிதோண்டி புதைப்பதா?: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி வெளியிட்ட அறிக்கையில், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, சமூக நீதியை குழித் தோண்டி புதைக்கும் அடாத செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அரசு நிர்வாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின்னணியில் இருந்து வந்த தனியார் நிறுவன உயர் அலுவலர்களை அரசின் செயலாளர்கள், மற்றும் உயர் அதிகாரிகளாக நியமனம் செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
நேரடியாக நியமனம்: தனியார் துறையில் சிறப்பாகச் செயல்படும் தலைமைச் செயல் அதிகாரிகளை, நேரடியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமிக்கும் திட்டம் என்ற பெயரில் கடந்த 2018ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதே திட்டத்தின் கீழ் புதிதாக மேலும் 45 பேரை நியமிக்க மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அண்மையில் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
சட்ட மீறல்: இந்தத் திட்டம் அப்பட்டமான சட்ட மீறல் மட்டும் அல்ல, அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்படும் கொடும் தாக்குதல் ஆகும். இதன் மூலம் அரசு நிர்வாகம் முழுமையாக ஆர்.எஸ்.ஸ். பிடியின் கீழ் செல்லும் வகையில் பாதை அமைக்கும் சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டு வருவது கடும் கண்டனத்திற்கு உரியது.
ராகுல் சொன்னது என்ன?: "மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள முக்கிய பதவிகளில் லேட்டரல் என்ட்ரி ஆட்சேர்ப்பு மூலம் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை மத்திய அரசு வெளிப்படையாகப் பறிக்கிறது; நாட்டின் உயர்மட்ட அதிகாரம் உட்பட அனைத்து உயர் பதவிகளிலும் பட்டியலின மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதைத் தொடர்ந்து கூறி வருகிறேன். இதனை மேம்படுத்துவதற்குப் பதிலாக, லேட்டரல் என்ட்ரி மூலம் பட்டியலினத்தைச் சேர்ந்தோர் உயர் பதவிகளில் இருந்து மேலும் வெளியே தள்ளப்படுகிறார்கள்.
சதியை முறியடிப்போம்: இந்தச் செயல் யு.பிஎஸ்.சி தேர்வுக்குத் தயாராகும் திறமையான இளைஞர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். மேலும் இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக நீதியின் மீது மத்திய அரசு தொடுத்துள்ள தாக்குதலாகும்" என்று காங்கிரஸ் கட்சி முன்னணித் தலைவரும் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சுட்டிக் காட்டி இருப்பது கவனிக்கத்தக்கது ஆகும். இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்துப் போராடி அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ். மயமாக்கும் மத்திய பாஜக அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications