கொந்தளித்த ஜோதிமணி.. பாஜக தமிழருக்கு எதிரானது! டெல்லியில் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் உட்பட பலர் மீது ஏபிவிபி-யினர் நடத்திய தாக்குதலுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் உட்பட பலர் மீது ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபி நடத்திய தாக்குதலுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்து இருக்கிறார். பாஜக எப்போதுமே தமிழர்களுக்கு எதிரான கட்சி என்றும், தற்போது அதன் எல்லைகளை தாண்டி விட்டதாகவும் கூறி உள்ளார்.
மும்பையில் ஐஐடியில் தர்ஷன் சொலான்கி என்ற 18 வயது தலித் மாணவர் முதலாம் ஆண்டு பி டெக் பயின்று வந்து உள்ளார். ஐஐடி விடுதியின் மாடியில் இருந்து கடந்த 12 ஆம் தேதி அவர் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்தது.

கடும் கண்டனம்
இது தொடர்பாக மகாராஷ்டிரா போலீஸ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. விடுதியில் சொலான்கி அறையில் தங்கி இருந்த மற்ற மாணவர்களிடமும் விபரங்களை கேட்டறிந்தது. இந்த நிலையில் சொலான்கி மரணம் ஒரு நிறுவன படுகொலை என மும்பை ஐஐடி வளாகத்தில் இயங்கி வரும் APPSC எனப்படும் அம்பேத்கர் பெரியார் பூலே படிப்பு வட்டம் தெரிவித்து இருக்கிறது.

சாதி, மத ஒடுக்குமுறை
தலித், இஸ்லாமியர் உள்ளிட்ட விளிம்பு நிலை சமுதாயங்களை சேர்ந்த மாணவர்கள் ஐஐடி வளாகங்களில் மர்மமான முறையிலும், தற்கொலை செய்தும் உயிரிழந்து வருவது தொடர்கதையாகி உள்ளது. இந்த நிலையில் சாதி, மத ஒடுக்குமுறையே சொலான்கி மரணத்தின் பின்னணியில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில்தான் அவரது மரணத்துக்கு நீதிகோரி பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராடி வருகிறார்கள்.

டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகம்
அந்த வகையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் SFI உள்ளிட்ட இடதுசாரி மாணவர் அமைப்பினர் தர்ஷன் சொலான்கி மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பயின்ற தமிழ் மாணவர்களும் பங்கேற்று இருக்கிறார்கள். அவர்கள் மீது ஏபிவிபியை சேர்ந்தவர்கள் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

தமிழ் மாணவர்கள்
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களும் படுகாயமடைந்தனர். அவர்கள் வைத்திருந்த தந்தை பெரியார் படமும் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஏபிவிபி நடத்திய தாக்குதலில் தமிழ் மாணவரின் மண்டை உடைக்கப்பட்டு ரத்தம் வழிந்தோடிய நிலையில் உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்து இருக்கிறார்கள்.

ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல்
அப்போது ஏபிவிபி மாணவர் அமைப்பினர் அங்கு வந்த ஆம்புலன்ஸையும் தாக்கியதாக அதை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த தாக்குதல் சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரம் சத்ரபதி சிவாஜி படத்தை ஊர்வலம் சென்ற இடதுசாரி மாணவர் அமைப்பினர்தான் தாக்கியதாக ஏபிவிபி மாணவர் அமைப்பினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

ஜோதிமணி கண்டனம்
இந்த தாக்குதல் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, "டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாணவர்கள் மீது பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி நடத்திய காட்டுமிராண்டி தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த குற்றத்துக்காக அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். பாஜக எப்போதுமே தமிழர்களுக்கு எதிரானது. தற்போது அவர்கள் அனைத்து எல்லைகளையும் கடந்துவிட்டார்கள்." என்றார்.
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications