அக்னிபாத்துக்கு காங்கிரஸிலிருந்து ஆதரவுக்குரல்.. புகழ்ந்து தள்ளிய எம்.பி. மணிஷ் திவாரி
டெல்லி: அக்னிபாத் திட்டம் மிகவும் அவசியமானது என்றும், இந்தியாவுக்கு இளம் படைகள் தேவை எனவும் காங்கிரஸ் எம்.பி மணிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னிவீர் என்ற பெயரில் புதிய துறையை உருவாக்கி இருக்கும் மத்திய அரசு, அக்னிபாத் என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறது.
இத்திட்டத்தை நாடு முழுவதும் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது. எதிர்கட்சிகளும், முன்னாள் ராணுவ அதிகாரிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்

அக்னிபாத்
இத்திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் கீழ் அக்னி வீர் என்ற பெயர் கொண்ட வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். 17.5 முதல் 21 வயதுக்கு உட்பட்ட 45 ஆயிரம் பேருக்கு இத்திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட இருக்கிறது. இவர்களுக்கு 6 மாத பயிற்சியளிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஒப்பந்த பணி வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்கு பின் 25% பேருக்கு மட்டும் 15 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் மீண்டும் பணி வழங்கப்படும். மீதம் உள்ள 75 சதவீதம் பேர் எந்தவிதமான ஓய்வூதிய பலனும் இன்று பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். எதிர்ப்பை தொடர்ந்து இந்த வயது வரம்பு 23 ஆக அதிகரிக்கப்பட்டது.

இளைஞர்கள் எதிர்ப்பு
இந்த புதிய திட்டத்துக்கு ராணுவத்துக்கு தயாராகி வரும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தெலுங்கானா, உபி, பீகாரில் ரயில்களுக்கு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் தீ வைத்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணிகள் நடைபெறவில்லை. ராணுவ பணிக்காக 2 ஆண்டுகளாக பலர் காத்துள்ள நிலையில், ராணுவம் வயது வரம்பை தளர்த்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

ராணுவம் விளக்கம்
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி, "ஒழுக்கமே எங்களின் அடிப்படை. ஒழுக்கக்கேடான செயல்களுக்கு இங்கு இடமில்லை. அக்னிபாத்தை திரும்பப்பெற முடியாது. உயரமான இடங்களில் பாதுகாப்பு பணியில் வயதானவர்களை ஈடுபடுத்துவதால் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே இளைஞர்களை தேர்வு செய்கிறோம். அக்னிவீரர்கள் உயிரிழந்தால் இழப்பீடாக ரூ.ஒரு கோடி வழங்கப்படும்." என்றார்.

ஆட்கள் தேர்வு
ஒரு பக்கம் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்க மறுபக்கம், அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளுக்கும் தனித்தனியாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விமானப்படைக்கான ஆட்கள் தேர்வு கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. 27 ஆம் தேதி காலை 10:30 மணி நிலவரப்படி 94,281 பேர் இந்த பணிக்காக விண்ணப்பித்து இருக்கின்றனர்.

காங்கிரசிலிருந்து ஆதரவுக்குரல்
அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் கண்டனம் தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்து இருக்கும் நிலையில், அக்கட்சியிலிருந்து அக்னிபாத் திட்டத்துக்கு ஆதரவுக்குரல் வந்திருக்கிறது. குலாம் நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவர்கள் குழுவான ஜு-23 ல் இருக்கும் எம்.பி. மணிஷ் திவாரி இது அக்னிபாத்துக்கு ஆதரவாக பதிவிட்டு இருக்கிறார்.

ராணுவத்துக்கு இளம் வீரர்கள் தேவை
அதில், "அக்னிபாத் திட்டம் மிகவும் அவசியமானது. அது சரியான திசையில் செல்ல வேண்டும். இளைஞர்கள் இத்திட்டத்தை நினைத்து கவலைப்படுவது புரிகிறது. உண்மை என்னவென்றால், இந்தியாவுக்கு தொழில்நுட்பத்தையும் ஆயுதங்களையும் கையாள தெரிந்த இளமையான படைகள் தேவை. பாதுகாப்பு படை பணி என்பது வேலைவாய்ப்பு உறுதி திட்டம் கிடையாது." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications