மொத்த உள்நாட்டு உற்பத்தி கடும் சரிவு.. 1991-க்கு பிறகு மிக முக்கியமான பட்ஜெட்.. மணீஷ் திவாரி கருத்து
டெல்லி: மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவில் இருக்கும் நிலையில் 1991-ம் ஆண்டுக்கு பிறகு இது மிக முக்கியமான பட்ஜெட் என்று காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்.
வரலாற்றில் முதன்முறையாக இம்முறை மின்னணு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

பட்ஜெட் இன்று தாக்கல்
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் இதுவரை இல்லாத அளவு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 29-ம் தேதி தொடங்கியது.

முதன்முறை மின்னணு பட்ஜெட்
அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். பின்னர் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இன்று காலை 11 மணிக்கு 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்கிறார். இம்முறை முதன்முறையாக,மின்னணு பதிவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு
இதை காண்பதற்கு இணையதள முகவரி அளிக்கப்பட்டுள்ளது. அதில் பட்ஜெட் விவரங்கள் உடனுக்குடன் வெளியிடப்படும். இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி பட்ஜெட் குறித்து டுவிட்டரில் கருத்து கூறியதாவது:- 1991-ம் ஆண்டுக்கு பிறகு மிக முக்கியமான பட்ஜெட்டாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியானது சரிவின் 37-வது மாதத்தில் உள்ளது.

நிதி அமைச்சர் ஒப்புக் கொள்வார்
நிலைமையின் தீவிரத்தை நிதி அமைச்சர் நிர்மலா சிதராமன் ஒப்புக்கொள்கிறார் என்று நான் நம்புகிறேன். எவ்வாறாயினும், பொருளாதார கணக்கெடுப்பு ஏதேனும் இருந்தால், நீங்கள் பெறக்கூடியது எந்தவொரு பொருளையும் புழுக்கமான சான்ஸ் அல்ல என்று மணீஷ் திவாரி கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications