உங்களை அங்கு சேர்த்து டிரீட்மென்ட் தரணும்.. அமித் ஷாவை கிண்டலடித்த காங். எம்.பி மீது பாஜக பாய்ச்சல்
பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் உடல்நிலை குறித்து காங்கிரஸ் எம்.பி பிகே ஹரிபிரசாத் கிண்டல் செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

டெல்லி: பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் உடல்நிலை குறித்து காங்கிரஸ் எம்.பி பிகே ஹரிபிரசாத் கிண்டல் செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. நேற்று முதல்நாள் திடீர் என்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நெஞ்சில் லேசான வலியும், தொடர் இருமலும், மூச்சு பிரச்சனையும் இருந்துள்ளது.
இதனால் அமித் ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அமித் ஷாவிற்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடல்நிலை
இவருடைய உடல்நிலை தற்போது தேறிவருவதாக தகவல்கள் வந்துள்ளது. விரைவில் இவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறுகிறார்கள். இவர் விரைவில் உடல்நிலை தேறி வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி டிவிட் செய்து இருந்தது.

என்ன சொன்னார்
இதுகுறித்து கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பியும், காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளருமான பிகே ஹரிபிரசாத் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டார். அதில், அமித் ஷா காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தினார். அவர்களை மும்பையில் அடைத்து வைத்தார். அவர்களுக்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆட்கள் காவலில் இருந்தனர். இது அமித் ஷாவிற்கு டென்ஷனை அளித்தது.

மிக மோசம்
இதனால் அவரது உடல்நலம் கெட்டது. இதனால்தான் அமித் ஷாவிற்கு காய்ச்சல் வந்தது, அதுவும் சாதாரண காய்ச்சல் இல்லை, பன்றிக்காய்ச்சல். அவர் இதேபோல் அரசியல் செய்வார் என்றால் இன்னும் மோசமாக பாதிக்கப்படுவார். அவர் திருந்துவதே சரியானதாக இருக்கும் என்று பிகே ஹரிபிரசாத் குறிப்பிட்டு இருந்தார்.
|
என்ன பதில்
இந்த கருத்து பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. இதற்கு தற்போது கர்நாடக பாஜக பதில் அளித்துள்ளது, அதில் ''காங்கிரஸ் எம்.பி பிகே ஹரிபிரசாத் பாஜக தலைவர் அமித் ஷாவின் உடல்நிலையை கிண்டல் செய்கிறார். அவருக்கு மனித தன்மை என்றால் என்னவென்று கற்றுக்கொடுங்கள். அவர் நல்ல சமூகத்தில் வாழ்வதற்கு தகுதியற்றவர். அவரை NIMHANS மருத்துவமனையில் மனநல சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கேட்டுக்கொள்கிறோம்'' என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications