வாய்ப்பில்ல ராஜா.. மாதத்திற்கு 6,000 ரூபாயா?... ‘நிதி ஆயோக்’ முன்னாள் து.தலைவர் விமர்சனம்
Recommended Video

டெல்லி: ஏழை மக்களின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் மாதம் 6 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதியை நிறைவேற்றுவது சாத்தியமற்றது என 'நிதி ஆயோக்' முன்னாள் துணைத்தலைவர் அரவிந்த் பானகாரியா தெரிவித்துள்ளார்.
5 கோடி குடும்பங்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் நியாய் ( NYAY) திட்டத்தை காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளது.
சிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் 500 வீதம் ஆண்டுக்கு 6,000 நிதியுதவி வழங்கப்படும் என்ற பாஜகவின் திட்டத்தை விட, ராகுலின் இந்த வாக்குறுதி, அதிரடி அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.

பட்ஜெட்டில் 13 சதவீதம்
இந்த நிலையில், ‘நிதி ஆயோக்' முன்னாள் துணைத்தலைவர் அரவிந்த் பானகாரியா கூறுகையில், நியாய் ( NYAY) திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால், 3.6 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்றும், இது மத்திய அரசின் மொத்த பட்ஜெட்டில் 13 சதவீதம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதிநிலை நெருக்கடி
திட்டத்தை செயல்படுத்துவதற்கு 3.6 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதியாதாரம் குறித்து யாரும் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும், இந்த தொகை பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியைவிட அதிகம் என்றும் அரவிந்த் பானகாரியா தெரிவித்துள்ளார். நிதிநிலை நெருக்கடியாக இருக்கும்போது பட்ஜெட்டில் 13 சதவீதத்தை ஒதுக்குவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றும் கூறியுள்ளார்.

நிதி எங்கிருந்து வரும்?
இதற்கிடையே, தற்போதைய ‘நிதி ஆயோக்' அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி பணி மனப்பான்மைக்கு எதிராக அமைவதுடன், நிதி ஒழுங்குமுறையை சிதற செய்துவிடும் என்றும், இத்திட்டத்தை செயல்படுத்த எங்கிருந்து நிதி வரும் எனவும் கேள்வி எழுப்பினார்.

பொருளாதார சரிவு
இதன் செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாகவும், பட்ஜெட்டில் 13 சதவீதமாகவும் இருக்கும். இத்திட்டத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. அவ்வாறு, இத்திட்டத்தை செயல்படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் 4% பின்னோக்கி சென்று விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
நாட்டின் பொருளாதாரத்தை எண்ணிப் பார்க்காமல் ராகுல் காந்தி இது போன்ற வாக்குறுதிகளை அளித்து உள்ளார். 1971 ஆம் ஆண்டு ‘வறுமையை அகற்றுவோம்' என இந்திரா காந்தி வாக்குறுதி அளித்தார், ஆனால் அந்த வாக்குறுதி இன்றுவரை சாத்தியமற்றதாக உள்ளது. ராகுல் காந்தியின் அறிவிப்பும் அதுபோல் அமைந்துவிடும் என்றும் விமர்சனம் செய்துள்ளார். ராஜீவ் குமாரின் இந்த பேச்சுக்கு விளக்கம் அளிக்கும்படி, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
"மோடியை மிரட்டுவது ஆபத்து.." புதின் சொன்ன வார்த்தை.. அப்படியே டிரம்ப் மீதும் பாய்ச்சல் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications