Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தானை தாக்க வேண்டாம் என அமெரிக்கா தடுத்துவிட்டது.. மும்பை தாக்குதல் பற்றி ப.சிதம்பரம் சொன்ன தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய வரலாற்றில் மிக மோசமான தீவிரவாதத் தாக்குதல் என்றால் அது மும்பை பயங்கரவாத தாக்குதல் தான். இதற்கிடையே மும்பை தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மீது ராணுவ ரீதியான பதிலடி கொடுக்க அப்போதைய காங்கிரஸ் அரசு ஆலோசித்ததாகவும் இருப்பினும் அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகங்கள் கேட்டுக் கொண்டதால் ராணுவ தாக்குதல் ஐடியா கைவிடப்பட்டதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ல் நடந்த தீவிரவாதத் தாக்குதலை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட மாட்டோம். மும்பையில் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிக மோசமான தாக்குதலை நடத்தினர். இதற்கிடையே மும்பை தாக்குதல் தொடர்பாக மாஜி உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

Congress P Chidambaram Reveals International Pressure Stopped Mumbai Attack Retaliation in 2008

சர்வதேச நாடுகள்

அதாவது மும்பை தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா பரிசீலித்ததாகவும் இருப்பினும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் அழுத்தம் மற்றும் மூத்த தூதர்களின் ஆலோசனையின் காரணமாக அந்த முடிவைக் கைவிட்டதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

இது தொடர்பாகப் பிரபல இந்தி சேனல் ஒன்றுக்கு ப. சிதம்பரம் அளித்த பேட்டியில், "அப்போது போரைத் தொடங்க வேண்டாம் என்று அறிவுறுத்தல் உலகம் முழுவதும் டெல்லிக்கு வந்தன. அப்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்த கொண்டலீசா ரைஸும் எங்களிடம் வந்து பேசினார். இதன் காரணமாகவே ராணுவ ரீதியான பதிலடி வேண்டாம் என முடிவெடுத்தோம்" என்றார்.

ப சிதம்பரம்

மும்பை தாக்குதல் நடந்த சில நாட்களில் மத்திய அமைச்சரவை மாற்றப்பட்டது. அப்போது உள் துறை அமைச்சராக இருந்த சிவராஜ் வி. பாட்டீல் தீவிரவாதத் தாக்குதலுக்குத் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து நிதித்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அதைக் குறிப்பிட்டுப் பேசிய ப சிதம்பரம் மேலும், "நான் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற 2, 3 நாட்களுக்குப் பிறகு கொண்டலீசா ரைஸ் என்னையும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து, தயவு செய்து பதிலடி கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இது அரசு எடுக்க வேண்டிய முடிவு என்று நான் கூறினேன். ஆனாலும், நிச்சயம் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருந்தது.

ராணுவ பதிலடி

மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும்போதே கூட ராணுவ பதிலடி கொடுப்பது தொடர்பாகப் பிரதமர் விவாதித்தார். நீண்ட விவாதம் இது தொடர்பாக நடந்தது. இறுதியில் வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய வெளியுறவு சேவை (IFS) கேட்டுக் கொண்டதால் பதிலடி கொடுக்க வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது" என்று அவர் கூறினார்.

பாஜக சாடல்

ப. சிதம்பரத்தின் இந்தக் கருத்துக்கள் இணையத்தில் வேகமாகப் பரவியது. இதற்கிடையே மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இந்த நேர்காணல் தொடர்பான வீடியோவை பகிர்ந்து காங்கிரஸை சாடியுள்ளார். இது தொடர்பாக பிரகலாத் ஜோஷி தனது ட்விட்டரில், "வெளிநாடுகளின் பிரஷர் காரணமாகவே மும்பை தாக்குதல் தவறாகக் கையாளப்பட்டது என்ற அனைவரும் அறிந்த உண்மையை 17 ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஒப்புக்கொண்டு இருக்கிறார். இது ரொம்பவே தாமதமான ஒன்று" என்றார்.

மும்பை தாக்குதல்

2008ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல்களை நடத்தினர். சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம், லியோபோல்ட் கஃபே, காமா மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்தப் பயங்கரவாதத் தாக்குதலின் போது, அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிக்கப்பட்டார். அஜ்மல் கசாப் மீது நீதி விசாரணை நடத்தப்பட்டு, 2012ல் அவர் தூக்கிலிடப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+