டிச.19-ல் "இந்தியா" கூட்டம், டிச.21-ல் செயற்குழு.. லோக்சபா தேர்தலுக்கு ஜரூராக தயாராகும் காங்கிரஸ்!
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல்களைத் தொடர்ந்து லோக்சபா தேர்தலுக்கு காங்கிரஸ் முழு வீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறது. டெல்லியில் டிசம்பர் 19-ந் தேதி "இந்தியா" கூட்டணி கூட்டம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 21-ந் தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தைக் கூட்டியுள்ளார் அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே.
பாஜகவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. இக்கூட்டணியின் ஆலோசனை கூட்டங்கள் பாட்னா, பெங்களூர், மும்பையில் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து மாநிலங்களில் "இந்தியா" கூட்டணி கட்சிகளிடையே லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்கியது.

ஆனால் திடீரென 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கவனம் செலுத்தியது. அதுவும் காங்கிரஸ் தமது தனிப்பலத்தை காட்ட இந்த தேர்தல்களை பயன்படுத்த முனைந்தது. இதனால் சத்தீஸ்கர், ம.பி, ராஜஸ்தான் மாநிலங்களில் பெரும் தோல்வியைத்தான் காங்கிரஸ் சந்தித்தது. குறைந்தபட்சம் இந்த மாநிலங்களிலாவது "இந்தியா" கூட்டணி பார்முலாவை காங்கிரஸ் கடைபிடித்திருக்க வேண்டும் என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் டெல்லியில் நாளை மறுநாள் "இந்தியா" கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும் டெல்லி கூட்டத்தில் பங்கேற்கிறார். லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம், மாநிலங்களில் தேர்தல் தொகுதி உடன்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 21-ந் தேதி டெல்லியில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தை அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டியுள்ளார். மாநில சட்டசபை தேர்தல் தோல்விகளுக்கான காரணங்கள் குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. தேர்தல் தோல்வியை எதிர்கொண்ட ம.பி.யில் கமல்நாத், மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை காங்கிரஸ் மேற்கொள்ள இருக்கிறது. இது தொடர்பாகவும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications