அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம்.. பல நாளாக பிளான் போட்ட பாஜக.. முந்திக்கொண்டு அறிவித்த ராகுல்!
பாஜக திட்டமிட்டு வைத்திருந்த ''சமமாக குறைந்தபட்ச வருமானம் வழங்கும்'' திட்டத்தை காங்கிரஸ் கட்சி துணிந்து தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து இருக்கிறது.
Recommended Video

டெல்லி: பாஜக திட்டமிட்டு வைத்திருந்த ''சமமாக குறைந்தபட்ச வருமானம் வழங்கும்'' திட்டத்தை காங்கிரஸ் கட்சி துணிந்து தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து இருக்கிறது. இது பாஜகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
2019 லோக் சபா தேர்தலுக்கு பின் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் சமமாக குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதை காங்கிரஸ் வாக்குறுதியாக வெளியிட்டு இருக்கிறது.
இது தேர்தல் களத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக இந்த திட்டத்தை குறித்து அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.

என் இந்த திட்டம் முக்கியம்
அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம், Universal Basic Income ( UBI) , அனைவருக்கும் அடிப்படை சம்பளம் என்று சில பெயர்களில் இந்த திட்டம் உலகம் முழுக்க நடைமுறையில் இருக்கிறது. இதன் சாராம்சம் வெவ்வேறு நாடுகளில் மாறுபடும். பொதுவாக அனைவருக்கும் குறைந்த பட்ச ஊதியம் வழங்க இதில் வழிவகை செய்யப்படும். சில நாடுகளில் வேலை பார்க்காதவர்களுக்கு கூட குறைந்த பட்ச தொகை அளிக்கப்படும். இதனால் சம்பளம் வாங்காத நபரே இல்லை என்ற நிலையை உருவாக்க முடியும்.

சூப்பர் திட்டம்
இந்த திட்டம் மூலம் எப்போதும் விவசாயிகள் அதிக பலன் பெற வாய்ப்புள்ளது. அதாவது, விவசாயிகள் வறட்சியில் இருந்தால் கூட அவர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ஒன்று அரசால் வழங்கப்படும். அதுபோல் வேலையில்லாத பட்டதாரிகளும் இதனால் பலன் பெறுவார்கள்.

காங்கிரஸ் அறிவிப்பை
இந்த திட்டத்தைதான் கொண்டு வர போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆனால் என்னமாதிரியான விதிகள் இதில் இருக்கும் என்பது குறித்த விரிவான விளக்கம் இன்னும் வெளியாகவில்லை. யாருக்கு எல்லாம் இந்த சம்பளம் கிடைக்கும் என்று காங்கிரஸ் இன்னும் கூறவில்லை.

பாஜக திட்டம்
பாஜக இந்த திட்டத்தை தனது தேர்தல் வாக்குறுதியாக அளிக்க இருந்தது. அதேபோல் சமயத்தில் இதற்காக லோக் சபாவில் திட்டம் ஒன்றை இந்த பட்ஜெட்டில் தாக்கல் செய்யவும் முடிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து பாஜக அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை.

ராகுல் அதிரடி
இந்த நிலையில்தான் பாஜகவை முந்திக்கொண்டு ராகுல் காந்தி அதிரடியாக தற்போது அந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளார். இது தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு உதவும் என்று கூறுகிறார்கள். பாஜகவிற்கு எப்படி 10% இடஒதுக்கீடு உதவுமோ அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு இது உதவும் என்று கூறுகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications