தடுப்பூசி பற்றி பிரதமர் மோடி டிவியில் பேசியது தப்பான தகவல்.. காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
டெல்லி: இந்தியாவில் ஒரு கோடி கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார் . ஆனால் இதில் சில உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்து விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லபா இன்று அளித்துள்ள பேட்டியில், நரேந்திர மோடி பேசியதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இதோ அவரது பேட்டியிலிருந்து..

ராஜிவ் காந்தி காலம்
மோடி தனது உரையில் இந்தியா தற்போது தான் ஒரு தடுப்பூசியை தயாரித்து இருக்கிறது என்று பேசினார். ஆனால் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது ஆறு வகை நோய்களுக்கு எதிராக நாடு முழுக்க தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தினார். 1985-ஆம் ஆண்டு இந்த தடுப்பூசி நடவடிக்கைகள் நாடு முழுக்க நடைபெற்றன. தொழுநோய் முற்றிலுமாக வேரறுக்கப்பட வேண்டும் என்று நடவடிக்கை எடுத்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி. ஆனால் அவர் எந்த ஒரு விளம்பரமும் செய்து கொள்ளவில்லை.

சீனாவை பாருங்க
குறைவான மக்கள் தொகை கொண்ட நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். ஆனால் இந்தியாவுக்கு ஈடாக மக்கள் தொகை கொண்ட சீனாவில் 216 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில் 80% அளவுக்கான மக்களுக்கு இரண்டு வகைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது நாட்டில் அந்த எண்ணிக்கை குறைவு என்பதோடு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போட்டவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது.

மன்னிப்பு கேட்க வேண்டும்
கடந்த ஏப்ரல்-மே காலகட்டத்தில் இந்தியாவில் இரண்டாவது அலை பரவியபோது மத்திய அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் பலர் உயிரிழந்தனர் அவர்களின் குடும்பத்தினரிடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் அரசு நிர்வாகத் திறமை இல்லாமல் இருந்ததுதான் அந்த உயிரிழப்புகளுக்கு காரணம். இவ்வாறு கௌரவ் வல்லபா தெரிவித்தார்.

இரு டோஸ் அவசியம்
பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடம் ஆற்றிய உரையின் போது இந்திய அரசின் செயல்பாடு பற்றி சந்தேகம் தெரிவித்தவர்களுக்கு 100கோடி தடுப்பூசி செலுத்துவதன் மூலமாக தக்க பதிலடி கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை 100 கோடி கொரோனா தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியது. ஆனால் இன்னமும் 30 சதவீத மக்கள் கூட இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட வரை எண்ணிக்கை 50 சதவீதத்துக்கும் மேல் இருக்கக் கூடிய அமெரிக்காவில் கூட நோய் பரவல் காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இரண்டு டோஸ் தடுப்பு ஊசி போட்டவர்கள் எண்ணிக்கை 75 சதவீதத்துக்கும் அதிகமாக உயரும் போது தான் இந்தப் பெருந்தொற்று முடிவுக்கு வரும் என்கிறார்கள் சுகாதாரத் துறை வல்லுனர்கள்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications