அடுத்த ஷாக்.. காங்., மூத்த தலைவர் ஏகே அந்தோணியின் மகன் பாஜகவில் இணைந்தார்.. கேரளாவில் செம ட்விஸ்ட்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் கேரளா முதல்வருமான ஏகே அந்தோணியின் மகன் அனில் அந்தோணி இன்று திடீரென பாஜகவில் இணைந்தார். பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்துக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜனவரியில் காங்கிரஸில் தனது பொறுப்புகளை ராஜினாமா செய்த நிலையில் அனில் அந்தோணி இன்று பாஜகவில் இணைந்து கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஏகே அந்தோணி. கேரளாவை சேர்ந்தவர். சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமாக அறியப்படும் நபர்களில் இவரும் ஒருவர். இவர் கேரளா முதல் அமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தார்.

இவரது மகன் அனில் அந்தோணி. இவரும் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்தார். கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும், அகில இந்திய அளவில் சமூக வலைதளம் மற்றும் டிஜிட்டர் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை ஒருங்கிணைப்பாளராக அனில் ஆண்டோனி செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் தான் சமீபத்தில் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் வெளியானது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் மத்திய அரசு இந்த ஆவணப்படத்துக்கு தடை விதித்தது. இந்த தடையை மீறி காங்கிரஸ், இடதுசாரி கட்சியினர் பல இடங்களில் ஆவணப்படத்தை ஒளிபரப்பு செய்தனர். குறிப்பாக கேரளாவில் பிபிசி ஆவணப்படத்துக்கு வெளிப்படையாக காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதற்கு அனில் அந்தோணி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதுபற்றி அவர், ‛‛பாஜகவுடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும் தவறான எண்ணம் கொண்ட பிபிசியின் கருத்தை ஆதரிப்பது என்பது நாட்டின் இறையாண்மையின் மதிப்பை சீர்குலைக்க செய்வது போல் இருக்கும்'' என தெரிவித்து இருந்தார். இவரது கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்து விலகி கொள்வதாக அனில் அந்தோணி அறிவித்ததோடு அதற்கான கடிதங்களை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் தான் இன்று அனில் அந்தோணி பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் அனில் அந்தோணி மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். இந்த சம்பவம் கேரளா காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications